10ம் வகுப்பு முடித்தவர்களுக்கு இந்திய ராணுவத்தில் வேலை – விண்ணப்பங்கள் வரவேற்பு!

0
10ம் வகுப்பு முடித்தவர்களுக்கு இந்திய ராணுவத்தில் வேலை - விண்ணப்பங்கள் வரவேற்பு!
10ம் வகுப்பு முடித்தவர்களுக்கு இந்திய ராணுவத்தில் வேலை - விண்ணப்பங்கள் வரவேற்பு!
10ம் வகுப்பு முடித்தவர்களுக்கு இந்திய ராணுவத்தில் வேலை – விண்ணப்பங்கள் வரவேற்பு!

இந்திய ராணுவத்தில், முடித்திருத்துபவர், காவலாள், சுகாதார அலுவலர் ஆகிய பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க ஆர்வமும் தகுதியும் உடைய விண்ணப்பதாரர்கள், தங்களின் விண்ணப்பத்தை ஆட்சேர்ப்பு வெளியிடப்பட்ட 45 நாட்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும், இதற்கான தகுதி, தேர்வு செயல்முறை மற்றும் பிற விவரங்களை பற்றி இப்பதிவில் பார்க்கலாம்.

இந்திய ராணுவத்தில் வேலை:

இந்திய ராணுவத்தில் சேர ஆவலுடன் இருக்கும் இளைஞர்களுக்கு இதோ ஒரு அற்புதமான வேலை வாய்ப்பு. இந்திய ராணுவம் ஆட்சேர்ப்புக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பு அடிப்படையில் இந்திய ராணுவத்தில் முடித்திருத்துபவர், காவலாள், சுகாதார அலுவலர் ஆகிய பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. முடித்திருத்துபவர் பணியில் 12 காலியிடங்கள், சுகாதார அலுவலர் பணியில் 58 காலியிடங்கள், காவலாள் பணியில் 43 காலியிடங்கள் என மொத்தம் 113 காலியிடங்கள் உள்ளன. பதவியிடங்களின் எண்ணிக்கை தோராயமானது, நிர்வாக காரணங்களால் அதிகரிக்கவோ, குறையவோ கூடும்.

Exams Daily Mobile App Download

முடி திருத்துபவர், காவலாள் பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் 10ம் வகுப்பு அல்லது அதற்கு சமமான கல்வியில் தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும். மேலும், முடி திருத்தும் பணியில் திறன் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். சுகாதார அலுவர் பணிக்கு 10ம் வகுப்பு தேர்ச்சியுடன், Sanitary Inspector பயிற்சி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். மேலும் முடி திருத்துபவர், காவலாள் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் வயது 18-25 என்ற வயது வரம்பில் இருக்க வேண்டும். இட ஒதுக்கீடு பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வழக்கமான தளர்வு அளிக்கப்படும். இந்த பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் இறுதி பட்டியல் தயார் செய்யப்படும்.

IT நிறுவன ஊழியர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு – பரிசாக BMW பைக்! வாரத்தில் 3 நாள் மட்டுமே வேலை!

விண்ணப்பதாரர், விண்ணப்பப்படிவம் மற்றும் நிபந்தனைகளை http://www.davp.nic.in/WriteReadData/ADS/eng_10622_6_2223b.pdf  இணையதளத்திலும் பதிவிறக்கம் செய்ய வேண்டும். மேலும் சமீபத்திய புகைப்படத்துடன் விண்ணப்பப் படிவத்தினை பூர்த்தி செய்து, கல்வி சான்றிதழ்,  கடவுச்சீட்டு (பாஸ்போர்ட் ), நிரந்தர முகவரிக்கான சான்று, பிறப்பிடச் சான்று, இருப்பிடச் சான்று உள்ளிட்ட நகல்களை இணைத்து  அனுப்ப வேண்டும்.

ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியான 45 நாட்களுக்குள் விண்ணப்பங்கள் அனுப்பி வைக்க வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய முகவரி Presiding Officer (BOO-I), HQ Southern Command (BOO-I) ஆகும். சுகாதார அலுவலர் பதவிக்கு விண்ணப்பிப்போர் தங்கள் விண்ணப்பங்களை Commanding Officer, 431 Field Hospital, PIN-903431, c/o 56 APO என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!