Infosys & Google நிறுவனத்தில் இன்ஜினியரிங் படித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு – முழு விவரங்கள் இதோ!

0
Infosys & Google நிறுவனத்தில் இன்ஜினியரிங் படித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு - முழு விவரங்கள் இதோ!
Infosys & Google நிறுவனத்தில் இன்ஜினியரிங் படித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு - முழு விவரங்கள் இதோ!
Infosys & Google நிறுவனத்தில் இன்ஜினியரிங் படித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு – முழு விவரங்கள் இதோ!

உலகின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களான இன்போசிஸ், கூகுள் மற்றும் கேப்ஜெமினி உள்ளிட்டவை தனது அலுவலகங்களில் தொழில்நுட்ப வல்லுநர்களை பணியமர்த்துவதாக அறிவித்துள்ளது. இது குறித்த கூடுதல் விவரங்களை இப்பதிவில் காணலாம்.

IT வேலைவாய்ப்பு

உலகம் முழுவதும் கொரோனா நோய்த்தொற்று பரவல் ஓய்ந்து வந்து கொண்டிருக்கும் சூழ்நிலையில் தொழில்நுட்ப நிறுவனங்களில் ஏகப்பட்ட மாற்றங்கள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இந்தியாவில் உள்ள முன்னணி IT நிறுவனங்களில் வேலைவாய்ப்புகள் கொட்டிக்கிடக்கிறது. குறிப்பாக இன்போசிஸ், TCS உள்ளிட்ட நிறுவனங்கள் கடந்த நிதியாண்டில் மட்டும் 1 லட்சத்துக்கும் அதிகமானவர்களுக்கு வேலைவாய்ப்புகளை அளித்துள்ளது. இதனுடன் நடப்பு நிதியாண்டிலும் இதே அளவில் பணியமர்த்தல் நடவடிக்கையை தொடர இந்நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன.

இந்த வரிசையில் தற்போது இன்ஃபோசிஸ், கூகுள், கேப்ஜெமினி உள்ளிட்ட தொழில்நுட்ப நிறுவனங்கள் பல தொழில்நுட்ப பதவிகளுக்கு புதியவர்களை பணியமர்த்துவதாக அறிவித்துள்ளன. இது குறித்த முழு விவரங்களையும் விரிவாக பார்க்கலாம்.

Exams Daily Mobile App Download

இன்ஃபோசிஸ்:

பதவி – டிஜிட்டல் ஸ்பெஷலிஸ்ட் இன்ஜினியர் & ஸ்பெஷலிஸ்ட் புரோகிராமர்

கல்வித்தகுதிகள் – B.E/B.Tech/M.E/M.Tech/MCA/M.Sc

வேலை இடம் – இந்தியா முழுவதும்

தகுதி மற்றும் தேவைகள்:

  • கணினி அறிவியல் பொறியியல், தகவல் அறிவியல் மற்றும் பொறியியல், மின்னணுவியல் மற்றும் தொடர்புப் பொறியியல், தகவல் தொழில்நுட்பம், மின் மற்றும் மின்னணுவியல் பொறியியல், கணிதம் மற்றும் கணினி, மற்றும் மின்னணுவியல் மற்றும் தொலைத்தொடர்பு பொறியியல் ஆகியவற்றில்
  • B.E/B.Tech/M.E/M.Tech/MCA/M.Sc பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.
  • அனைத்து செமஸ்டர்களிலும் CGPA சராசரியாக இருக்க வேண்டும்.

அக்னிபாத் திட்டத்திற்கு எதிராக கிளம்பும் எதிர்ப்பு – மத்திய அரசு முடிவு என்ன?

கேப்ஜெமினி:

பதவி – VLSI

கல்வித்தகுதி – BE / BTech / ME / MTech

வேலை இடம் – பெங்களூர் & ஹைதராபாத்

தகுதி மற்றும் தேவைகள்:

  • ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 10, 12, டிப்ளமோ, பட்டப்படிப்பு மற்றும் முதுகலை பட்டப்படிப்புகளில் குறைந்தபட்சம் 60% தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • விண்ணப்பதாரர்கள் BE/BTech/ME/MTech பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
  • ஆங்கிலத்தில் சிறந்த எழுத்து மற்றும் பேசும் திறன் தேவை.

கூகுள்:

பதவி – IT ஆதரவு பொறியாளர்

கல்வித்தகுதி – தொடர்புடைய STEM துறையில் இளங்கலை பட்டம்

வேலை இடம் – பெங்களூர் & ஹைதராபாத்

தகுதி மற்றும் தேவைகள்:

  • விண்ணப்பதாரர்கள் தொடர்புடைய தொழில்நுட்ப சான்றிதழை பெற்றிருக்க வேண்டும்.
  • டெஸ்க்டாப்கள்/லேப்டாப்கள், ஃபோன் சிஸ்டம்கள், வீடியோ கான்பரன்சிங் மற்றும் பல்வேறு வயர்லெஸ் சாதனங்களை வரிசைப்படுத்துவது மற்றும் ஆதரிப்பது பற்றிய சரியான வேலை அறிவை வேட்பாளர்கள் கொண்டிருக்க வேண்டும்.
  • புதிய தொழில்நுட்பத்திற்கான ஆர்வம் மற்றும் புதிய திறன்களை கற்றுக்கொள்ளும் விருப்பம் அவசியம்.

S&P குளோபல்:

பதவி – மென்பொருள் பொறியாளர்
இடம் – நொய்டா

வேலை விவரங்கள்:

  • உலகளாவிய போர்ட்ஃபோலியோ மதிப்பீடுகள் குழுவுடன் நெருக்கமாக ஒத்துழைக்க வேண்டும்.
  • பல்வேறு இயங்குதளக் கூறுகளின் உரிமையைப் பெறுவதற்கும், ஒட்டுமொத்த இயங்குதளத்தில் இந்த கூறுகள் எவ்வாறு பொருந்துகின்றன என்பதைப் புரிந்துகொள்வதும் அவசியம்.
  • புதிய மென்பொருளை உருவாக்கவும், ஏற்கனவே உள்ளவற்றை மேம்படுத்தவும் திறன் வேண்டும்.

    TNPSC Online Classes

    To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
    To Join => Whatsapp கிளிக் செய்யவும்
    To Join => Facebookகிளக் செய்யவும்
    To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!