எலக்ட்ரிக் ஸ்கூட்டர் நிறுவனத்தில் விரைவில் 5000 பேருக்கு வேலைவாய்ப்பு – முக்கிய அறிவிப்பு!

0
எலக்ட்ரிக் ஸ்கூட்டர் நிறுவனத்தில் விரைவில் 5000 பேருக்கு வேலைவாய்ப்பு - முக்கிய அறிவிப்பு!
எலக்ட்ரிக் ஸ்கூட்டர் நிறுவனத்தில் விரைவில் 5000 பேருக்கு வேலைவாய்ப்பு - முக்கிய அறிவிப்பு!
எலக்ட்ரிக் ஸ்கூட்டர் நிறுவனத்தில் விரைவில் 5000 பேருக்கு வேலைவாய்ப்பு – முக்கிய அறிவிப்பு!

இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாக எலக்ட்ரிக் வாகனங்களின் உற்பத்தி அதிகரித்து வருகிறது. இந்நிலையில் எலக்ட்ரிக் வாகனங்களை தயாரிப்பதில் கவனம் செலுத்துவது மட்டுமல்லாமல், முழுமையான சுற்றுச்சூழல் அமைப்பை காக்கும் வகையில், ஒகினாவா நிறுவனம் ராஜஸ்தானில், புதிய எலக்ட்ரிக் வாகன உற்பத்தி ஆலையை தொடங்க உள்ளது.

500 பேருக்கு வேலைவாய்ப்பு:

இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான தேவை மற்றும் உற்பத்தி நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. காற்று மாசுபாட்டை குறைக்கவும், கார்பன் உமிழ்வை முற்றிலுமாக தவிர்க்கவும் மாற்று எரிபொருள் மற்றும் பாரம்பரிய எரிபொருள் பயன்பாட்டுக்கு மாற்றாக, எலெக்ட்ரிக் வாகன உற்பத்திக்கு கடந்த ஆண்டு முதல் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது. எலெக்ட்ரிக் வாகனங்களைப் பொறுத்தவரை, டூவீலர் முதல் சொகுசு கார்கள் வரை பல முன்னணி கார் தயாரிப்பாளர்களும், பலவிதமான வாடிக்கையாளர்களுக்கு தேவைப்படும் மாடல்களை வடிவமைத்து உற்பத்தி செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

Exams Daily Mobile App Download

மத்திய மற்றும் மாநில அரசுகளும் எலக்ட்ரிக் வாகனங்களை தயாரிக்கும் தொழிற்சாலைகளுக்கு பல்வேறு சலுகைகள் வழங்கி ஊக்குவித்து வருகின்றன. இந்தியாவில் உள்ள பிரபல நிறுவனங்களும் எலக்ட்ரிக் வாகன உற்பத்தியில் அதிகமாக முதலீடு செய்யவும் திட்டமிட்டு உள்ளன. அந்த வகையில் ஒகினாவா நிறுவனம் ராஜஸ்தான் மாநிலத்தில் புதிய எலக்ட்ரிக் வாகன உற்பத்தி ஆலையை அமைக்க திட்டமிட்டுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள கரோலி என்ற பகுதியில் அமைக்கப்படும் புதிய ஆலையில் ரூ.500 கோடி முதலீடு செய்ய இருப்பதாகவும், ஆண்டுக்கு 10 லட்சம் எலக்ட்ரிக் வாகனங்களை உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் ஒகினாவா நிறுவனம் தெரிவித்துள்ளது.

தமிழக அரசு அலுவலகத்தில் க்ளார்க் வேலை – மாதம் ரூ.50,000 வரை சம்பளம்! முழு விவரம் இதோ!

மேலும் அடுத்த ஆண்டு அதாவது 2023-ம் ஆண்டுக்குள் இந்த ஆலை செயல்பட தொடங்கும் என்றும் ஒகினாவா நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். இந்த புதிய ஆலை செயல்பாட்டுக்கு வந்தால் 5,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றும் ஒகினாவா நிறுவனம் அறிவித்துள்ளது. இதுகுறித்து ஒகினாவா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ஜிதேந்தர் ஷர்மா அவர்கள் செய்தியாளர்களிடம் கூறியது, ராஜஸ்தானில் புதிதாக அமைக்கப்படும் ஆலையில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையம் இருக்கும் என்றும் இதன் மூலம் இந்திய வாகன சந்தையில் மட்டுமன்றி உலக எலக்ட்ரிக் வாகன சந்தையிலும் எங்களால் தேவைகளை பூர்த்தி செய்ய முடியும் என்று தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!