தமிழக அரசில் 12ம் வகுப்பு முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு – முழு விபரங்கள் இதோ!

0
தமிழக அரசில் 12ம் வகுப்பு முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு - முழு விபரங்கள் இதோ!
தமிழக அரசில் 12ம் வகுப்பு முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு - முழு விபரங்கள் இதோ!
தமிழக அரசில் 12ம் வகுப்பு முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு – முழு விபரங்கள் இதோ!

தமிழகத்தில் சிவகங்கை மாவட்ட சுகாதார சங்கம் மற்றும் தேசிய காசநோய் ஒழிப்பு திட்டத்தில் தற்காலிக அடிப்படையில் ஆய்வக நுட்பனர், மருந்தாளுநர் மற்றும் மேற்பார்வையாளர் உள்ளிட்ட பணியிடங்கள் காலியாக உள்ளன. இதற்கான விண்ணப்பங்களை வருகிற டிசம்பர் 6 தேதிக்குள் விண்ணப்பித்து சமர்ப்பிக்க வேண்டும்.

சிவகங்கை மாவட்டத்தில் சுகாதாரத் துறையில் வேலை

கொரோனா பெருந்தொற்றின் காரணமாக பொதுமக்கள் பல்வேறு இழப்புகளை சந்தித்து வருகின்றன. அதில் குறிப்பாக தங்களது வேலைகளை இழந்து வருகின்றன. இதனால் தங்களது பொருளாதாரத்தை மேம்படுத்தி கொள்ள முடியவில்லை. இதனை சரி செய்யும் விதமாக தமிழக அரசு பல்வேறு அரசு காலிப்பணியிடங்களை அறிவித்து வருகிறது. இதனை தொடர்ந்து சிவகங்கை மாவட்ட சுகாதார சங்கம் மற்றும் தேசிய காசநோய் ஒழிப்பு திட்டத்தில் தற்காலிக அடிப்படையில் ஆய்வக நுட்பனர், மருந்தாளுநர் மற்றும் மேற்பார்வையாளர் உள்ளிட்ட பணியிடங்கள் காலியாக உள்ளதாக தெரிவித்துள்ளது.

EPFO அக்கவுண்ட் வைத்திருப்பவர்களுக்கு சூப்பர் அறிவிப்பு – அனைத்து சேவைகளும் ஒரே செயலியில்!

அத்துடன் ஆய்வக நுட்பனர் பணியில் 4 காலிப்பணியிடங்கள் உள்ளன, இதற்கான கல்வித் தகுதி அறிவியல் பாடத்துடன் 12 ஆம் வகுப்பு படித்திருக்க வேண்டும். அதே போல் ஆய்வக நுட்புனர் டிப்ளமோ படித்திருக்க வேண்டும். மேலும் இதற்கு மாத சம்பளமாக ரூ.10,000 வழங்கப்படுகிறது. அதனை தொடர்ந்து மருந்தாளுநர் பணியில் ஒரே ஒரு காலி பணியிடம் உள்ளது. இப்பணியிடத்தில் விண்ணப்பிக்க மருந்தாளுநர் பட்டப்படிப்பு (B.Pharm)அல்லது டிப்ளமோ (D.Pharm) தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும். இதற்கு மாத சம்பளமாக ரூ.15,000 வழங்கப்படுகிறது. அத்துடன் 2 காலிப்பணியிடங்கள் முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் பிரிவில் உள்ளது.

தமிழகத்தில் 5 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் – அரசு அறிவிப்பு !

இதற்கு ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு மற்றும் சுகாதார ஆய்வாளர் படிப்பு ஆகிய கல்வித்தகுதியை பெற்றிருக்க வேண்டும். இதற்கு மாத சம்பளமாக ரூ. 15,000 வழங்கப்படுகிறது. இதற்கான வயது வரம்பு 65 ஆகும். இந்த பணியிடங்களில் தகுதியானவர்கள் நேர்முக தேர்வின் அடிப்படையில் தேர்வு செய்யபடுவார்கள். இந்த பணியிடங்களில் விண்ணப்பிக்க விரும்புவர்கள் தங்களது சுய விவர விண்ணப்பக் கடிதத்துடன் தேவையான ஆவணங்களை இணைத்து, துணை இயக்குனர் மருத்துவ பணிகள் அலுவலகம், மாவட்ட காசநோய் மையம், பழைய அரசு மருத்துவமனை வளாகம், சிவகங்கை – 630561 என்ற முகவரிக்கு பதிவுத் தபால் மூலமாக அனுப்ப வேண்டும்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here