IDBI வங்கியில் வேலைவாய்ப்பு – 226 காலியிடங்கள்! முழு விபரம் இதோ!

0
IDBI வங்கியில் வேலைவாய்ப்பு - 226 காலியிடங்கள்! முழு விபரம் இதோ!
IDBI வங்கியில் வேலைவாய்ப்பு - 226 காலியிடங்கள்! முழு விபரம் இதோ!
IDBI வங்கியில் வேலைவாய்ப்பு – 226 காலியிடங்கள்! முழு விபரம் இதோ!

இந்தியாவில் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு நாளுக்கு நாள் அதிக அளவில் வெளியாகி கொண்டே இருக்கிறது. அந்த வகையில் ஐடிபிஐ வங்கியில் காலியாக உள்ள இடங்களை நிரப்ப உள்ளதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிப்பதற்கான வழிமுறைகளை பற்றி பார்ப்போம்.

வேலைவாய்ப்பு

இந்தியாவில் கொரோனா பரவல் காரணமாக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு என்பது குறைந்து அளவில் இருந்தது. இதையடுத்து தற்போது கொரோனா பரவல் கட்டுக்குள் உள்ளதால் அரசு துறைகளில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப தீவிர நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் ஐடிபிஐ வங்கியில் Manager – Grade B, Assistant General Manager (AGM) – Grade C, Deputy General Manager (DGM) – Grade D உள்ளிட்ட பணியிடங்களில் காலியாக உள்ள இடங்களை நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

Exams Daily Mobile App Download

குறிப்பாக, இப்பணிக்கு விண்ணப்பிக்க விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சமாக 25 வயது முதல் அதிகபட்சமாக 45 வயது வரை உள்ளவராக இருக்க வேண்டும். மேலும் இதற்கு விண்ணப்பிக்க ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் இளங்கலை பட்டம் பெற்றவராக இருக்க வேண்டும். அத்துடன் இதற்கு முதுகலை பட்டப்படிப்பு, பொறியியல் படிப்பை முடித்தவர்களுக்கு விண்ணப்பிக்க தகுதியுடைவர்கள் ஆவார்கள். இதில் தகுதியான நபர்கள் Preliminary Screening & Personal Interview உள்ளிட்ட தேர்வு முறைகளின் மூலமாக தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். இப்பணிக்கு ஆன்லைன் மூலமாக விண்ணப்ப பதிவு மேற்கொள்ளலாம்.

அரிசி முதல் இறைச்சி விலை வரை GST யில் வரவிருக்கும் மாற்றங்கள் – முழு விவரங்கள் இதோ!

இதில் விண்ணப்பதாரர்கள் ஏதேனும் ஒரு பணியிடத்திற்கு மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். எனவே, இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்கள் https://www.idbibank.in/idbi-bank-careers-current-openings.aspx என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று வருகிற ஜூலை 10ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.  இதற்கு SC/ ST/ PWD உள்ளிட்ட பிரிவை சேர்ந்தவர்கள் விண்ணப்பக் கட்டணமாக ரூ. 200 மற்றும் மற்ற விண்ணப்பதாரர்களுக்கு ரூ.1000 கட்டணமாக செலுத்த வேண்டும்.  இது தொடர்பான கூடுதல் தகவல்களைப் பெற https://www.idbibank.in/pdf/careers/Detailed-Advertisement-Specialists-Officer-22-23.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளலாம்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!