அஞ்சல் துறையில் 38,926 பேருக்கு வேலைவாய்ப்பு – 10ம் வகுப்பு முடித்தவர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு!

0
அஞ்சல் துறையில் 38,926 பேருக்கு வேலைவாய்ப்பு - 10ம் வகுப்பு முடித்தவர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு!
அஞ்சல் துறையில் 38,926 பேருக்கு வேலைவாய்ப்பு - 10ம் வகுப்பு முடித்தவர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு!
அஞ்சல் துறையில் 38,926 பேருக்கு வேலைவாய்ப்பு – 10ம் வகுப்பு முடித்தவர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு!

தபால் அலுவலக கிராம சார்பில் தபால் ஊழியர் பணியிடங்களை நிரப்புவதற்கு வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு தேர்வு கிடையாது மற்றும் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

தபால் அலுவலகம்

கொரோனா தொற்றின் காரணமாக எந்த ஒரு துறையிலும் காலியிடங்கள் நிரப்பப் படாமல் இருந்தன. அதுமட்டுமின்றி போட்டி தேர்வுகளும் நடத்தப்படாமல் இருந்தன. இந்த வருடம் கொரோனா குறைந்த நிலையில் போட்டி தேர்வுகள் அறிவிக்கப்பட்டு அரசு காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான பணிகளை மேற்கொண்டு வருகின்றன. போட்டி தேர்வுக்கான தேதி அறிவிக்கப்பட்டு தேர்வு நடத்துவதற்கான முன்னேற்பாடுகளை செய்து வருகின்றன.

TN Job “FB  Group” Join Now

அதன்படி,இந்திய தபால் துறையின் கீழ் இயங்கி வரும் தபால் அலுவலகங்களில் கிராம டக் சேவக்ஸ் என்ற கிராம தபால் ஊழியர் மற்றும் உதவி கிராம தபால் ஊழியர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. நாடு முழுவதும் மொத்தம் 38,926 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன எனவும் இதில் தமிழகத்தில் மட்டும் 4,310 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன என தகவல் வெளியாகியுள்ளது.

தபால் துறை பணிக்கு 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பின்னர் சைக்கிள் ஓட்ட தெரிந்திருக்க வேண்டும்.இந்த பணிக்கு விண்ணப்பிப்பதற்கான வயது வரம்பு 18 வயது முதல் 40 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இருப்பினும், SC/ST மற்றும் பிரிவுகளுக்கு 5 ஆண்டுகளும், OBC பிரிவுக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகள் வயது வரம்பில் தளர்வு உண்டு என்பதை தெரிவித்திருக்கின்றன.

சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள் கவனத்திற்கு – RCB உடனான போட்டி கணிப்பு! யாருக்கு வெற்றி வாய்ப்பு?

கிராம தபால் ஊழியர்க்கான மாத சம்பளம் ரூ.12,000ம் மற்றும் உதவி கிராம தபால் ஊழியர்களுக்கான மாத சம்பளம் ரூ.10,000 ஆகும். இந்த பணியிடங்களுக்கு 10 வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். தேர்வு கிடையாது. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் https://indiapostgdsonline.gov.in/ என்ற இணையதளப் பக்கம் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க கடைசி தேதி ஜூன் 5 /2022 ஆகும்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!