தமிழக அரசின் 108 ஆம்புலன்ஸ் சேவையில் வேலைவாய்ப்பு – டிச.24ம் தேதி நேர்காணல்!

0
தமிழக அரசின் 108 ஆம்புலன்ஸ் சேவையில் வேலைவாய்ப்பு - டிச.24ம் தேதி நேர்காணல்!
தமிழக அரசின் 108 ஆம்புலன்ஸ் சேவையில் வேலைவாய்ப்பு - டிச.24ம் தேதி நேர்காணல்!
தமிழக அரசின் 108 ஆம்புலன்ஸ் சேவையில் வேலைவாய்ப்பு – டிச.24ம் தேதி நேர்காணல்!

108 ஆம்புலன்ஸ் சேவையில் மருத்துவ உதவி பணியாளர் பணியிடங்களை நிரப்ப ஜி.வி.கே. – இம்.எம்.ஆா்.ஐ. நிறுவனம் தற்போது அறிக்கை வெளியிட்டுள்ளது. இதற்கான விண்ணப்பங்களை வருகிற டிச.24 ஆம் தேதி நேரில் வர வேண்டும்.

வேலைவாய்ப்பு:

கொரோனா நோய் தொற்றின் காரணமாக மக்கள் தங்களின் வேலை வாய்ப்புகளை இழந்து வருகின்றனர். அதனால் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் வேலைவாய்ப்பு முகாம்கள் ஏற்படுத்தப்பட்டு வேலைவாய்ப்புகள் அளிக்கப்படுகிறது. இந்நிலையில் எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனை வளாகத்தில் வருகிற டிச.24-ஆம் தேதி காலை 9 மணிக்கு வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில் வேலைவாய்ப்பற்றவர்கள் பயன்பெறும் விதமாக ஜி.வி.கே.-இம்.எம்.ஆா்.ஐ. நிறுவனம் தங்களுக்கான காலிப்பணியிடங்களை நிரப்ப உள்ளது. இதில் 108 ஆம்புலன்ஸ் சேவையில் மருத்துவ உதவி பணியாளர் காலிப்பணியிடங்களை தகுதியான நபர்களை கொண்டு நிரப்ப உள்ளதாக தெரிவித்துள்ளது.

தமிழக அரசு வேலைவாய்ப்பு அலுவலக பதிவு – 72.20 லட்சம் பேர் காத்திருப்பு! ஷாக் ரிப்போர்ட்!

மேலும் இப்பணியில் சேர விருப்பம் உள்ளவர்கள் பிஎஸ்சி நா்சிங், டிஜிஎன்எம், பிஎஸ்சி விலங்கியல், தாவரவியல், நுண் உயிரியல், உயிரி வேதியியல், உயிரித் தொழில்நுட்பவியல் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இவ்வாறு பிஎஸ்சி நா்சிங் படிப்பை தொடர முடியாதவர்கள் பிளஸ் 2-வுக்குப் பிறகு ஏஎன்எம், டிஎஃப்பிஎன், டிஎன்ஏ, டிஎம்எல்டி, டி.பாா்ம் ஆகியவற்றை நிறைவு செய்திருக்க வேண்டும். இப்பணியில் சேருவதற்கு 24 வயது முதல் 35 வயதுக்கு உட்பட்டவராக இருத்தல் வேண்டும்.

ஜன.3 முதல் 6 – 12ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு | அறிவிப்புகள் வெளியீடு!

இதையடுத்து இலகுரக வாகன ஓட்டுநர் உரிமம் மற்றும் பேட்ஜ் வாகன உரிமம் ஆகியவற்றை பணியாளர் பெற்றிருக்க வேண்டும். அத்துடன் ஓட்டுநர் உரிமம் பெற்று குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் நிறைவு பெற்றிருக்க வேண்டும். மேலும் பேட்ஜ் உரிமம் பெற்று 1 ஆண்டு நிறைவடைய வேண்டும். இம்முகாமில் கலந்து கொள்ள விரும்புவர்கள் வெள்ளிக்கிழமை காலை நேர்முக தேர்வில் தங்களது சான்றிதழ்களுடன் பங்கேற்க வேண்டும். இது தொடர்பான கூடுதல் விவரங்களை பெற 91541 89354, 91541 89425 ஆகிய எண்ணுக்கு தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!