தமிழக ரேஷன் கடை ஊழியர்கள் கவனத்திற்கு – உணவு வழங்கல் துறை செயலாளர் உத்தரவு!

0
தமிழக ரேஷன் கடை ஊழியர்கள் கவனத்திற்கு - உணவு வழங்கல் துறை செயலாளர் உத்தரவு!
தமிழக ரேஷன் கடை ஊழியர்கள் கவனத்திற்கு - உணவு வழங்கல் துறை செயலாளர் உத்தரவு!
தமிழக ரேஷன் கடை ஊழியர்கள் கவனத்திற்கு – உணவு வழங்கல் துறை செயலாளர் உத்தரவு!

தமிழகத்தில் ரேஷன் கடை ஊழியர்களுக்கு பணித்திறன் பயிற்சி அளிக்க வேண்டும் என உணவு வழங்கல் துறையின் தலைமை செயலாளர் முகமது நசி முதீன் அறிவுறுத்தியுள்ளார். மனித வள மேலாண்மை நிபுணர்கள் மூலம் பயிற்சி அளிக்கலாம் எனவும் தெரிவித்துள்ளார்.

ரேஷன் கடை ஊழியர்களுக்கு பயிற்சி:

தமிழகத்தில் ரேஷன் கடைகள் ஏழை எளிய மக்களுக்கு பேருதவியாக உள்ளது. ரேஷன் அட்டைகளை வைத்திருப்போர் உணவு பொருட்களை மலிவான விலையில் வாங்கி பயன் பெறுகின்றனர். மாதந்தோறும் அரிசி, சர்க்கரை, பருப்பு, எண்ணெய் மற்றும் அத்தியாவசிய வீட்டு உபயோக பொருட்கள் குறைந்த விலையில் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது கொரோனா ஊரடங்கு காலத்தில் அரசு சார்பில் நிவாரண நிதி மற்றும் இலவச மளிகை பொருட்களை ரேஷன் கடைகள் மூலம் அரசு அளித்தது.

தமிழகத்தில் கொரோனா மூன்றாம் அலை தொடக்கம்? பள்ளிகள் திறப்பதில் தாமதம்!!

இந்த நிலையில் ரேஷன் கடை ஊழியர்கள் மக்களிடம் தரக்குறைவாக பேசுகின்றனர். பொருட்களை பற்றி கேட்டால் சரியான பதிலை அளிப்பதில்லை, பொருட்களை மக்களுக்கு வழங்காமல் சில பணியாளர்கள் பதுக்கல் சம்பவங்களில் ஈடுபடுகின்றனர். இவற்றை பெரும்பாலான ரேஷன் கடைகளில் ஆய்வுக்கு செல்லும் போது காண முடிகிறது. எனவே ரேஷன் கடைக்கு வரும் மக்களிடம் எவ்வாறு நடந்து கொள்வது, எப்படி கேள்விக்கு பதிலளிப்பது, கடையின் கணக்குகளை பராமரிப்பது, வரும் பிரச்சனைகளை எதிர்கொள்வது போன்ற பணி திறன் பயிற்சியை அளிக்க வேண்டும் என உணவு வழங்கல் துறையின் தலைமை செயலாளர் முகமது நசீமுதீன் தெரிவித்துள்ளார்.

TN Job “FB  Group” Join Now

அடுத்த ஒரு மாதத்தில் பயிற்சியை நடத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மனித வள மேலாண்மை நிபுணர்கள் மூலம் பயிற்சி அளிக்கலாம் என்றும் மதுரையில் நடைபெற்ற உணவு வழங்கல் துறை ஆய்வு கூட்டத்தில் தலைமை செயலாளர் தெரிவித்துள்ளார். அதனை தொடர்ந்து ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டத்தின் கீழ் வெளிமாநில தொழிலாளர்களும் அரசின் அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் இதற்கு மாவட்ட வழங்கல் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here