அக்னி வீரர்களுக்கு Infosys நிறுவனத்தில் வேலைவாய்ப்பு? வெளியான தகவல்!

0
அக்னி வீரர்களுக்கு Infosys நிறுவனத்தில் வேலைவாய்ப்பு? வெளியான தகவல்!
அக்னி வீரர்களுக்கு Infosys நிறுவனத்தில் வேலைவாய்ப்பு? வெளியான தகவல்!
அக்னி வீரர்களுக்கு Infosys நிறுவனத்தில் வேலைவாய்ப்பு? வெளியான தகவல்!

நாடு முழுவதும் ‘அக்னிபாத்’ திட்டத்தின் மீதான போராட்டங்கள் வலுத்து வரும் சூழலில் இன்ஃபோசிஸ் நிறுவனம் அக்னி வீரர்களுக்கு சிறந்த வாய்ப்புகளை வழங்க இருப்பதாக தகவல் அளித்துள்ளது. இது குறித்த விவரங்களை இப்பதிவில் காணலாம்.

அக்னிபாத் வேலைவாய்ப்பு:

மத்திய அரசாங்கம் அறிவித்த அக்னிபாத் திட்டத்தின் கீழ் இளைஞர்களுக்கு இந்திய ராணுவத்தில் வேலைவாய்ப்பு அளிக்கும் திட்டம் நாடு முழுவதும் பெரிய பிரளயத்தை உண்டு பண்ணி இருக்கிறது. இந்த நிலையில் அக்னிபாத் திட்டத்தின் கீழ் 4 ஆண்டுகள் பணிபுரிந்து ஓய்வு பெற்று வரும் அக்னி வீரர்களுக்கு சிறந்த வாய்ப்புகளை வழங்க இருப்பதாக இன்ஃபோசிஸ் நிறுவனம் தகவல் அளித்துள்ளது. அதாவது, அக்னிபாத் திட்டத்தின் இளைஞர்களுக்கு இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அளிக்கப்படும் என அந்நிறுவனத்தின் இணை நிறுவனரும் தலைவருமான நந்தன் நிலேகனி தெரிவித்துள்ளார்.

Exams Daily Mobile App Download

இது குறித்து அவர் கூறுகையில், ‘இளைஞர்களுக்கு மிகவும் ஒழுக்கமான சுற்றுச்சூழல் அமைப்பில் தொழில் தொடங்குவதற்கு இது ஒரு சிறந்த வாய்ப்பு என்று நாங்கள் நம்புகிறோம். இது எதிர்கால வாழ்க்கைக்கான திறன்களை உருவாக்க உதவும். இன்ஃபோசிஸ் எப்பொழுதும் ஒரு திறமைக் குழுவை விரிவுபடுத்த விரும்புகிறது. மேலும் பணியாளர்களை ஆட்சேர்ப்பு செய்யும் போது நாங்கள் நன்கு நிறுவப்பட்ட தேர்வு அளவுகோல்களைப் பின்பற்றுவோம்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

தமிழக பள்ளிகளில் 31% கூடுதல் மாணவர் சேர்க்கை – கல்வித்துறை தகவல்!

அந்த வகையில் அரசாங்கம் அறிமுகப்படுத்திய அக்னிபாத் திட்டத்தின் வெளியீட்டின் திறனை இன்ஃபோசிஸ் அங்கீகரிக்கிறது என்றும் இந்த நிறுவனத்தில் புதிய ஆட்களை சேர்ப்பதற்கான அதன் சொந்த தேர்வு அளவுகோல்களை இன்போசிஸ் பின்பற்றும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக மஹிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா, டாடா சன்ஸ் குழும தலைவர் என் சந்திரசேகரன், பயோகான் தலைவர் கிரண் மசூம்தார்-ஷா, அப்பல்லோ மருத்துவமனை குழும நிர்வாக இயக்குனர் சங்கீதா ரெட்டி ஆகியோரும் மத்திய அரசின் அக்னிபாத் திட்டத்திற்கு ஆதரவாக அக்னி வீரர்களுக்கு வேலைவாய்ப்புகளை அளிப்பதாக உறுதியளித்துள்ளனர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here