தமிழகத்தில் 5ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு வேலைவாய்ப்பு – விண்ணப்பங்கள் வரவேற்பு!

0
தமிழகத்தில் 5ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு வேலைவாய்ப்பு - விண்ணப்பங்கள் வரவேற்பு!
தமிழகத்தில் 5ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு வேலைவாய்ப்பு - விண்ணப்பங்கள் வரவேற்பு!
தமிழகத்தில் 5ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு வேலைவாய்ப்பு – விண்ணப்பங்கள் வரவேற்பு!

தமிழகத்தில் தற்போது கிருஷ்ணகிரி மாவட்ட முன்னாள் படைவீரா் நல மையத்தில் இரவு காவலா் பணி காலிப்பணியிடமாக உள்ளது. இந்த பணியிடத்தை தினக்கூலி அடிப்படையில் நியமிக்க உள்ளதாக மாவட்ட ஆட்சியர் வி.ஜெயசந்திரபானு ரெட்டி அறிவித்துள்ளார்.

இரவு காவலா் பணியிடம்

தமிழகத்தில் தற்போது கிருஷ்ணகிரி மாவட்ட முன்னாள் படைவீரா் நல மையத்தில் இரவு காவலா் பணியிடம் காலியாக உள்ளது. இப்பணியிடத்தை தினக்கூலி அடிப்படையில் நேரடி நியமனம் மூலம் நிரப்ப உள்ளதாக தெரிவித்துள்ளது . இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மேலும் விண்ணப்பதாரர்கள் கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சோ்ந்த முன்னாள் படைவீரா்கள் மற்றும் சாா்ந்தோா்களாக இருந்தால் நேரடியாக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

Post Office சிறந்த சேமிப்பு திட்டம் – ரூ.16.2 லட்சம் வரை ரிட்டன்ஸ் பெறலாம்! முழு விபரம் இதோ!

இந்த பணிக்கு விண்ணப்பிக்க கண்டிப்பாக 5 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராக இருத்தல் வேண்டும் அல்லது அதற்கு மேல் படித்தவர்களாக இருத்தல் வேண்டும். மேலும் 50 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். இந்த பணியிடம் தினக்கூலி அடிப்படையில் நிரப்பப்படுகிறது. இது ஒரு தற்காலிகமான பணியாகும். இப்பணியை நிரந்தர அரசு பணியாக மாற்ற முடியாது. மேலும் எந்தவொரு அரசு சலுகைகளும் வழங்கப்பட மாட்டாது. இதற்கான சம்பளம் ரூ.323 வீதம் நாளொன்றுக்கு வழங்கப்படுகிறது. இதன் பணி நேரம் மாலை 5 மணி முதல் 9 மணி வரை இருக்கும்.

தமிழகத்தின் 16 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கனமழை கொட்டித் தீர்க்கும் – வானிலை அறிக்கை வெளியீடு!

ஆகவே தகுதியும், விருப்பமும் உள்ளவா்கள் தங்களது விண்ணப்பத்தை உதவி இயக்குநா், முன்னாள் படைவீரா் நல அலுவலகம், கிருஷ்ணகிரி என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். இதற்கான கடைசி நாள் டிசம்பர் 15 ஆம் தேதி ஆகும். அதற்குள் தங்களது விண்ணப்பத்தை அனுப்பி வைக்க வேண்டும். மேலும், இது தொடர்பான கூடுதல் விவரங்களை பெற 04343-236134 என்ற தொலைபேசி எண்ணுக்கு தொடா்பு கொள்ளலாம் எனவும் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் வி.ஜெயசந்திரபானு ரெட்டி தெரிவித்துள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!