தமிழக அஞ்சல் துறையில் 10ம் வகுப்பு முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு – விண்ணப்பிப்பது எப்படி?

0
தமிழக அஞ்சல் துறையில் 10ம் வகுப்பு முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு - விண்ணப்பிப்பது எப்படி?
தமிழக அஞ்சல் துறையில் 10ம் வகுப்பு முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு - விண்ணப்பிப்பது எப்படி?
தமிழக அஞ்சல் துறையில் 10ம் வகுப்பு முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு – விண்ணப்பிப்பது எப்படி?

தமிழகத்தில் சமீபகாலமாக அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் இருந்து அதிக வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி வருகின்றன. இந்த நிலையில் மத்திய அரசின் அஞ்சல் துறையில் இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த அறிவிப்பு அடிப்படையில் குறிப்பிடப்பட்ட பணிக்கு எப்படி விண்ணப்பிப்பது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

வேலைவாய்ப்பு அறிவிப்பு:

உலகம் முழுவதும் கொரோனா வருகைக்கு பிறகு அனைத்து துறைகளிலும் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டது. இந்த வகையில் எந்த ஒரு வேலைவாய்ப்பு அறிவிப்புகளும் அறிவிக்கப்படாமல் இருந்தது. இதனால் நாடு முழுவதும் வேலையின்மை அதிக அளவில் நிலவி வந்தது. இந்த நிலையில் தற்போது கொரோனா தாக்கம் படிப்படியாக குறைந்து வருவதால் அண்மையில் அனைத்து துறைகளில் இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன. இந்நிலையில் அஞ்சல் துறையில் 17 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளன.

ஆதார் கார்டில் ஆன்லைன் மூலம் முகவரியை மாற்றம் செய்வது எப்படி? எளிய வழிமுறைகள்!

இந்த அறிவிப்பு அடிப்படையில் ஸ்டாஃப் கார் டிரைவர் (சாதாரண தரம்) பணிக்கு 17 பணியிடங்கள் காலியாக உள்ளது. இந்த பணிக்கு 56 வயது நிறைவு அடைந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதிய அளவு நிலை-2 ஆகும். மேலும் அஞ்சல் மோட்டார் சர்வீஸ் கோயம்புத்தூர் மாநகராட்சியில் 11 பணியிடங்கள், அந்த வகையில் ஈரோடு பிரிவு 2 பணியிடங்கள், நீலகிரி பிரிவு 1 பணியிடங்கள், சேலம் மேற்கு பிரிவு 2 பணியிடங்கள், திருப்பூர் பிரிவு 1 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

EPFO பயனர்கள் கவனத்திற்கு – மார்ச் மாதத்தில் 2021-22ம் ஆண்டிற்கான வட்டி விகிதம் அறிவிப்பு!

மேலும் இப்பணிக்கு விண்ணப்பிக்க விண்ணப்பதாரர்கள் மூன்று வருட அனுபவத்துடன் இலகுரக மற்றும் கனரக மோட்டார் வாகனத்திற்கான செல்லுபடியாகும் ஓட்டுநர் உரிமம் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட வாரியத்திலிருந்து 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் மற்றும் அனுபவம் மற்றும் திறன் தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். இதனை தொடர்ந்து இந்த பதவிகளுக்கான விண்ணப்பங்கள் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் வழியில் வரவேற்க்கப்படுகிறது. இதன் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் வயது, சாதி, தகுதி, அனுபவம், ஓட்டுநர் உரிமம் போன்ற சான்றுகளின் சுய சான்றளிக்கப்பட்ட நகல்களுடன், ‘மேலாளர் அஞ்சல் மோட்டார் சேவை குட்ஸ் ஷெட் சாலைகள், கோயம்புத்தூர் – 641 001’ என்ற முகவரிக்கு நிரப்பபட்ட விண்ணப்பங்களை அஞ்சல் வாயிலாக அனுப்ப வேண்டும். இந்த பணிக்கு கூடுதல் விபரங்கள் அறிய அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று தெரிந்து கொள்ளலாம்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here