தமிழகத்தில் TET 2013 தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கு பணி – அரசுக்கு கோரிக்கை!

3
தமிழகத்தில் TET 2013 தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கு பணி - அரசுக்கு கோரிக்கை!
தமிழகத்தில் TET 2013 தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கு பணி - அரசுக்கு கோரிக்கை!
தமிழகத்தில் TET 2013 தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கு பணி – அரசுக்கு கோரிக்கை!

தமிழகத்தில் கடந்த 2013ம் ஆண்டில் நடந்த ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்று பணியின்றி காத்திருக்கும் ஆசிரியர்கள் பணி வழங்க கோரி தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்களுக்கு ஆசிரியர்கள் விண்ணப்பம் கடிதம் எழுதியுள்ளனர்.

ஆசிரியர்கள் விண்ணப்பம்:

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் ஆசிரியருக்கான காலியிடங்களை நிரப்ப ஆசிரியர் தகுதி தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இத்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் அரசு பள்ளிகளில் பணி நியமனம் செய்யப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் கடந்த 2013ம் ஆண்டு நடந்த ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கு தற்போது வரை பணி வழங்கவில்லை. இதை அடுத்து தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்களுக்கு தங்களுக்கு பணி வழங்க கோரி விண்ணப்ப கடிதம் எழுதியுள்ளனர்.

தமிழ்நாடு மின்சார வாரியம் முக்கிய அறிவிப்பு – நுகர்வோர் கவனத்திற்கு!

அதன்படி ஆசிரியர்கள் முதல்வருக்கு அனுப்பிய விண்ணப்ப கடிதத்தில் கூறியிருந்ததாவது, 2013 ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்று, கடந்த 7 ஆண்டுகளாக காத்திருக்கும் ஆசிரியர்களுக்கு அரசு பணி வழங்கி உதவ வேண்டுகிறோம். அரசு பள்ளிகளில் ஆசிரியராக பணியில் சேர்வதற்கு அதிகபட்ச வயது வரம்பு 45 என்பதை தமிழ்நாடு அரசு நீக்கம் செய்து, NCTE அறிவித்ததை இதற்கு முன்பு தேர்வு எழுதி, தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கு பொருந்தும் என்று அரசாணை வழங்க வேண்டுகிறோம்.

TN Job “FB  Group” Join Now

அரசு பள்ளிகளில் வரலாறு காணாத வகையில் அதிகமான மாணவர்கள் சேர்க்கை உள்ள போது, புதிய வேலை வாய்ப்பினை உருவாக்கம் செய்து பணி நியமனம் வழங்க வேண்டுகிறோம். மேலும் கடந்த 7 வருடங்களாக ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் இருக்கின்ற பட்சத்தில் தற்காலிக பணியிடங்களை உருவாக்கி அதன் மூலம் தொகுப்பு ஊதியத்தில் ஆசிரியர்கள் பணியமர்த்தம் செய்யப்பட்டதை நீக்கம் செய்து 2013ம் ஆண்டு தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற அனைத்து ஆசிரியர்களுக்கும் தங்களின் 2021ல் சட்டமன்ற தேர்தல் அறிக்கையில் கூறியிருந்ததை விரைந்து பரிசீலனை செய்து பணி நியமனம் செய்ய ஆவணம் செய்து உதவ வேண்டி கேட்டுக்கொள்கிறோம் என்று விண்ணப்ப கடிதத்தில் தெரிவித்துள்ளனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

3 COMMENTS

  1. What about 2012 Tet exam? I have scored 89 marks in 2012 Tet exam. Will they consider 2012 candidates who have scored 82 and above?

  2. தமிழகத்தின் இறைவனோடு நான் பேச வேண்டும் முடியுமா?

  3. அனைவருக்கும் காலை வணக்கம். 2013ஆம் வருடம் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் கடந்த எட்டு ஆண்டுகளில் தங்களுக்கு அரசாங்க பணி கிடைக்கும் என்று எண்ணி எண்ணி ஏங்கி தவிக்கும் மனதுடன் காத்திருக்கின்றனர். அவர்களின் எதிர்காலம் அரசாங்க உத்தரவில் தான் இருக்கிறது.எனவே தயவு கூர்ந்து அவர்களுக்கு கருணை காட்டுங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!