பட்டதாரி இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு – ரூ.1,12,400 வரை சம்பளம்! உடனே விண்ணப்பிக்கவும்!

0
பட்டதாரி இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு - ரூ.1,12,400 வரை சம்பளம்! உடனே விண்ணப்பிக்கவும்!
பட்டதாரி இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு - ரூ.1,12,400 வரை சம்பளம்! உடனே விண்ணப்பிக்கவும்!
பட்டதாரி இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு – ரூ.1,12,400 வரை சம்பளம்! உடனே விண்ணப்பிக்கவும்!

இளங்கலை பொறியியல் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு குறித்தான அறிவிப்பை மத்திய அரசு தற்போது வெளியிட்டுள்ளது. மேலும், இந்த பணியிடத்திற்கான தகுதி தேர்வுக்கு விண்ணப்பிக்க செப்டம்பர் 2 தான் கடைசி தேதி என்பதால் அதற்குள் விண்ணப்பிக்கும்படி அறிவிக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு அறிவிப்பு

மத்திய அரசு பொறியியல் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு குறித்தான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மேலும், இந்த வேலைவாய்ப்பிற்கான தகுதி தேர்வு குறித்தான அறிவிப்பையும் மத்திய அரசின் பணியாளர் தேர்வாணையம் (எஸ்எஸ்சி) வெளியிட்டுள்ளது. மேலும், இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பவர்கள் பொறியியல் துறையில் சிவில், மெக்கானிக்கல், எலக்ட்ரிகல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் போன்ற பிரிவுகளில் பி.இ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும் அல்லது 3 ஆண்டு டிப்ளமோ படித்திருக்க வேண்டும். இதுமட்டுமல்லாமல் இந்த பாடத்திட்டம் குறித்தான வேலைகளில் பணி அனுபவம் இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த இளங்கலை பொறியியல் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க நினைப்பவரின் வயது வரம்பு 01.01.2022 தேதியின்படி 30 வயதிற்குள் இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சில குறிப்பிட்ட பிரிவை சேர்ந்த பிரிவினரின் வயது வரம்பில் தளர்வுகள் வழங்கப்படுகிறது. மேலும், எஸ்எஸ்சி தேர்வில் தேர்வாளர் பெரும் மதிப்பெண் அடிப்படையிலேயே தகுதியான தேர்வாளர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். மேலும், எஸ்எஸ்சி தேர்வு மொத்தமாக இரண்டு தாள்களை கொண்டது.

ஆதாரில் இந்த தகவலை “ஒரு” முறை மட்டுமே புதுப்பிக்க முடியும் – இதை தெரிஞ்சுக்காம இருக்காதீங்க!

முதல் தாளில் கொள் குறிவகை கேள்விகளும், இரண்டாம் தாளில் விரிவாக விடையளிக்கும்படியான கேள்விகளும் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழகத்தை பொருத்த வரைக்கும் சென்னை, கோவை, மதுரை, சேலம், வேலூர், திருச்சி, திருநெல்வேலி ஆகிய நகரங்களில் தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விருப்பமும் தகுதியும் பெற்றவர்கள் http://www.sss.nic.in/ என்கிற இணையதள முகவரி பக்கத்திற்கு சென்று விண்ணப்பக்கட்டணமாக ரூ.100 செலுத்தி விண்ணப்பித்துக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க செப்டம்பர் 2 தான் கடைசி தேதி என்பதால் அதற்குள் விண்ணப்பிக்கும்படி அறிவிக்கப்பட்டுள்ளது. இளங்கலை பொறியியல் பணியிடத்திற்கு தேர்வாகும் தேர்வாளருக்கு ரூ.35,400 முதல் ரூ.1,12,400 வரைக்கும் சம்பளம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here