தமிழகத்தில் நாளை மறுநாள் (ஜூலை 27) வேலைவாய்ப்பு முகாம் – முழு விவரம் இதோ!

0
தமிழகத்தில் நாளை மறுநாள் (ஜூலை 27) வேலைவாய்ப்பு முகாம் - முழு விவரம் இதோ!
தமிழகத்தில் நாளை மறுநாள் (ஜூலை 27) வேலைவாய்ப்பு முகாம் - முழு விவரம் இதோ!
தமிழகத்தில் நாளை மறுநாள் (ஜூலை 27) வேலைவாய்ப்பு முகாம் – முழு விவரம் இதோ!

திருநெல்வேலி மாவட்டம் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக வேலைவாய்ப்பு மையம் சார்பில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. மேலும் வேலை வாய்ப்புகள் குறித்து தகவல்களை இப்பதிவில் காண்போம்.

வேலைவாய்ப்பு முகாம்:

இந்தியாவில் கடந்த சில வருடங்களாக நிலவி வந்த கொரோனா நோய்த் தொற்றின் காரணமாக மக்கள் அனைவரும் மிகவும் பாதிக்கப்பட்டிருந்தனர். இதன் காரணமாக நாடு பொருளாதாரத்தில் மிக மோசமான நிலையை அடைந்தது. மேலும் பணவீக்கம், விலைவாசி உயர்வு, வேலையின்மை போன்ற காரணங்களால் மக்கள் வறுமையில் வாடும் நிலை ஏற்பட்டது. கல்லூரிகளில் படிப்பை முடித்த மாணவ மாணவிகள் தங்களது அடுத்தகட்ட இலக்கான வேலையை பெறுவதில் மிகவும் போராட வேண்டிய நிலை இருந்தது. ஏற்கனவே வேலை பார்த்து கொண்டிருந்தவர்களும் வேலையை இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.

Exams Daily Mobile App Download

தற்போது கொரோனா பரவல் கட்டுக்குள் வந்துள்ளதால் நாடு பின்தங்கிய பொருளாதாரத்தில் இருந்து மீண்டு வருகிறது. தனியார் நிறுவனங்களும் வேலைவாய்ப்புகளை அதிகரித்து வருகிறது. அந்த வகையில் திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் தனியார் வேலைவாய்ப்பு நிறுவனம் நடத்தும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் வருகிற ஜூலை 27ம் தேதி (புதன்கிழமை)பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற உள்ளது. இது தொடர்பாக பல்கலைக்கழக பதிவாளர் ஜி.அண்ணாதுரை செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

தமிழகத்தின் 9 மாவட்டங்களில் கனமழை – வானிலை ஆய்வு மையம் தகவல்!

கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தை மையமாக கொண்டு செயல்படும் ராமச்சந்திர ரீடெய்ல் நிறுவனத்திற்கு பல்வேறு பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் தேர்ந்தெடுப்பதற்காக வேலைவாய்ப்பு முகாம் திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள சுந்தரனார் அரங்கத்தில் வரும் புதன்கிழமை காலை 9.30 மணிக்கு நடைபெற உள்ளது. பிபிஏ (வணிக நிர்வாகம்), பி.காம் (வணிகவியல்), பி.ஏ பொருளாதாரம், வரலாறு, ஆங்கிலம் (பி.எஸ்சி கணிதம், புள்ளியியல், கணினி அறிவியல்) ஆகிய பாடப்பிரிவுகளில் பட்டம் பெற்றவர்கள் மற்றும் இறுதியாண்டு பயிலும் மாணவர்கள் வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ளலாம். மேலும் வேலைவாய்ப்பில் கலந்து கொள்ள பதிவு கட்டணம் கிடையாது, அதுமட்டுமின்றி முன் அனுபவம் உள்ளவர்கள் மற்றும் இல்லாதவர்களும் கலந்து கொள்ளலாம்.

இந்த வேலைவாய்ப்பு முகாமில் தேர்வானவர்களுக்கு மாத ஊதியம் 14,000 மற்றும் உணவு தங்குமிடம் இலவசம். இந்த நேர்காணலில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் சுயவிவரக்குறிப்பு, பாஸ்போர்ட் சைஸ் போட்டோ, கல்வி சான்றிதழ்களுடன் ஜூலை 27ம் தேதி காலை 9.30 மணிக்கு நேரில் வந்து பதிவு செய்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 9994464607, 9976967564 என்ற கைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று தனியார் நிறுவனம் தெரிவித்துள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!