தமிழகத்தில் 10ம் வகுப்பு முடித்தவர்களுக்கு ரூ.60000 சம்பளத்தில் வேலைவாய்ப்பு – விண்ணப்பங்கள் வரவேற்பு!

0
தமிழகத்தில் 10ம் வகுப்பு முடித்தவர்களுக்கு ரூ.60000 சம்பளத்தில் வேலைவாய்ப்பு - விண்ணப்பங்கள் வரவேற்பு!
தமிழகத்தில் 10ம் வகுப்பு முடித்தவர்களுக்கு ரூ.60000 சம்பளத்தில் வேலைவாய்ப்பு - விண்ணப்பங்கள் வரவேற்பு!
தமிழகத்தில் 10ம் வகுப்பு முடித்தவர்களுக்கு ரூ.60000 சம்பளத்தில் வேலைவாய்ப்பு – விண்ணப்பங்கள் வரவேற்பு!

தமிழ்நாடு நீதி அமைச்சு பணியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதற்கான கல்வித் தகுதி, சம்பளம் குறித்த முழு விவரங்களை இந்த பதிவில் பார்க்கலாம்.

காலிப்பணியிடங்கள் அறிவிப்பு:

பெரம்பலூர் மாவட்ட நீதித்துறையில் தமிழ்நாடு நீதி அமைச்சு பணியில் காலியாக உள்ள தட்டச்சர் மற்றும் சுருக்கெழுத்து தட்டச்சர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக நியமனங்களாக நிரப்பப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான தகுதி உடையவர்கள் விண்ணப்பங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள கடைசி தேதிக்குள் அனுப்ப வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

1. பதவியின் பெயர்: சுருக்கெழுத்து தட்டச்சர் நிலை – III (தற்காலிகமானது)

  • காலிப்பணியிடங்கள் : 07
  • கல்வித்தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சி
  • சம்பளம் : ரூ.20,600 – ரூ.65,500

அண்ணா பல்கலை இன்ஜினியரிங் மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – பிரமாணப் பத்திரம் தாக்கல்!

2. பணி: தட்டச்சர் ( தற்காலிகமானது)

  • காலிப்பணியிடங்கள் : 04
  • கல்வித்தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சி
  • சம்பளம் : 19,500 – 62,000

வயது வரம்பு: 01.07.2021 அன்று குறைந்தபட்ச வயது வரம்பு 18 – அதிகபட்சம் 32 வயது இருக்க வேண்டும்.

உச்ச வயது வரம்பு : ஆதிதிராவிடர், பழங்குடி வகுப்பினர் மற்றும் அனைத்து வகுப்புகளையும் சார்ந்த ஆதரவற்ற விதவை பெண்களுக்கு அதிகபட்ச வயது 35 வயதுக்குள் இருக்க வேண்டும். வயது வரம்பு சலுகைகள் நடைமுறையில் உள்ள அனைத்து அரசு ஆணைகள் மற்றும் அரசு விதிமுறைகளின்படி செயல்படுத்தப்படும்.

ஜீ தமிழ் ‘செம்பருத்தி’ சீரியலில் இணைந்த ‘சத்யா’ நடிகை ஆயிஷா – மெகா சங்கம எபிசோடு! ரசிகர்கள் எதிர்பார்ப்பு!

விண்ணப்பிக்க கடைசி நாள்: விண்ணப்பங்களை தற்போது பணி செய்யும் விபரங்களுடன் கல்விச்சான்றிதழ்கள், ஜாதிச் சான்றிதழ் மற்றும் முன்னுரிமைக்கான சான்றிதழ்கள் மற்றும் பிற சான்றிதழ்களின் நகல்கள் சுய சான்றொப்பத்துடன் 20.12.2021 அன்று மாலை 5.45 மணிக்குள் முதன்மை மாவட்ட நீதிபதி அலுவலகத்திற்கு கிடைக்குமாறு தபாலில் அனுப்ப வேண்டும்

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி: முதன்மை மாவட்ட நீதிபதி, பெரம்பலூர்.

குறிப்பு: காலதாமதமாக வரும் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படமாட்டாது. தகுதியான நபர்களை தேர்வு செய்யவோ, நேர்காணலை ஒத்திவைக்கவோ, நியமன அறிக்கையை ரத்து செய்யவோ முதன்மை மாவட்ட நீதிபதிக்கு முழு அதிகாரம் உண்டு. சான்றிதழ்களின் சரிபார்த்தலின் அடிப்படையில் தகுதி வாய்ந்த நபர்கள் நீதிமன்ற இணையதள வலைதளத்தின் மூலம் அழைக்கப்படுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு: https://districts.ecourts.gov.in/notification-temporary-post-steno-typist-and-typist-perambalur-district-judiciary-dated-04-12-2021 என்ற இணையதளத்தை பார்க்கலாம்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!