தமிழக அஞ்சல் துறையில் 10ம் வகுப்பு முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு – விண்ணப்பங்கள் வரவேற்பு!

0
தமிழக அஞ்சல் துறையில் 10ம் வகுப்பு முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு - விண்ணப்பங்கள் வரவேற்பு!
தமிழக அஞ்சல் துறையில் 10ம் வகுப்பு முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு - விண்ணப்பங்கள் வரவேற்பு!
தமிழக அஞ்சல் துறையில் 10ம் வகுப்பு முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு – விண்ணப்பங்கள் வரவேற்பு!

இந்திய அஞ்சல் துறையின் தமிழ்நாடு வட்டத்தில் காலியாக உள்ள கார் ஓட்டுநர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தமிழக அஞ்சல் துறை வேலைவாய்ப்பு:

இந்தியாவில் கொரோனா பொது முடக்கத்தால் வேலையிழந்தோர் மீண்டும் வேலைவாய்ப்புகளை தேடி வரும் இந்த நிலையில் அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் மக்களுக்கு வேலைவாய்ப்பை வழங்க முன் வந்துள்ளது. அதன்படி தற்போது மத்திய மாநில அரசுகள் வேலைவாய்ப்பு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. மேலும் தனியார் நிறுவனங்கள் அவ்வப்போது வேலைவாய்ப்பு முகாம்களை நடத்தி படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை அறிவித்து வருகின்றனர். மற்ற துறைகளை தொடர்ந்து அஞ்சல் துறையும் வேலைவாய்ப்புகளை அறிவித்து வருகிறது.

அந்த வகையில் இந்திய அஞ்சல் துறை கிராம அஞ்சல் ஆயுள் காப்பீடு விற்பனை, அஞ்சல் ஆயுள் காப்பீடு ஆகிய பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டது. அதனை தொடர்ந்து தமிழகத்தில் கோவை, நீலகிரி, ஈரோடு, சேலம், திருப்பூர் மாவட்ட அஞ்சல் நிலையங்களில் காலியாக உள்ள 17 கார் ஓட்டுநர் பணியிடத்திற்கான ஆட்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர். இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரரின் வயது 56 வயதிற்குள் இருக்க வேண்டும். 10ம் வகுப்பு முடித்திருக்க வேண்டும்.

அஞ்சலகத்தில் வெறும் 5 வருடங்களில் 7 லட்சம் வரை சேமிப்பு – முழு விவரங்கள் இதோ!!

சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் வேலையில் விண்ணப்பதாரருக்கு உள்ள அனுபவம் அடிப்படையில் தகுதியான நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். மாத ஊதியமாக ரூ.18,000 முதல் ரூ. 62,000 வரை வழங்கப்படும். விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களின் நகல்களுடன் The Manager Mail Motor Service, Goods Shed Road, Coimbatore – 641001 என்ற முகவரிக்கு விண்ணப்பத்தை 10.03.2022 அன்றுக்குள் அனுப்ப வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here