TCS நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு 2022 – விண்ணப்பங்கள் வரவேற்பு!

0
TCS நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு 2022 - விண்ணப்பங்கள் வரவேற்பு!
TCS நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு 2022 - விண்ணப்பங்கள் வரவேற்பு!
TCS நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு 2022 – விண்ணப்பங்கள் வரவேற்பு!

இந்தியாவில் பிரபல தொழில்நுட்ப நிறுவனமான TCS வணிக சேவை, வங்கி உள்ளிட்ட துறைகளில் உள்ள காலிப் பணியிடங்கள் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

காலிப்பணியிடங்கள்:

இந்தியாவில் 2022ம் ஆண்டு தொடங்கியது முதல் பல்வேறு வகையான வேலைவாய்ப்புகள் குறித்த அறிவிப்பு வெளியான வண்ணம் உள்ளது. கொரோனா பெருந்தொற்றால் விதிக்கப்பட்ட ஊரடங்கு மற்றும் கட்டுப்பாடுகளால் வேலை இழந்தவர்கள் இந்த அறிவிப்புகள் மூலம் வேலைக்காக முயற்சித்து வருகின்றனர். இந்த நிலையில் மத்திய, மாநில அரசுகள் மக்களுக்கு வேலை வாய்ப்பை வழங்க முன் வந்துள்ளது. அதன்படி மாநில அரசுகள் துறை வாரியாக காலிப்பணியிடங்களை அறிவித்து அதற்கான போட்டித்தேர்வுகளையும் நடத்தி வருகிறது.

Exams Daily Mobile App Download

இந்த நிலையில் முன்னணி நிறுவனமான TCS தொழில் நுட்ப நிறுவனம் வேலைவாய்ப்புகள் குறித்த அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. அந்நிறுவனத்தில் வணிக சேவை, வங்கி நிதிச் சேவைகள் மற்றும் காப்பீடு, உயிரின அறிவியல் ஆகிய பிரிவுகளில் காலிப்பணியிடங்கள் உள்ளதாகவும் இப்பணிகளுக்கு 2019, 2020, 2021 ஆகிய மூன்று வருடங்களில் இளங்கலை அறிவியல் மற்றும் வணிகவியல் படிப்புகளில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விண்ணப்பதாரர்கள் 10, 12 ம் வகுப்பு மற்றும் பட்டப் படிப்புகளில் 60% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

BOI வங்கி நிறுவனத்தில் Diploma முடித்திருப்பவர்களுக்கு வேலை – நேர்காணல் மட்டுமே..!

தற்போது ஆன்லைன் வாயிலாக விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு வருகிறது. விண்ணப்பிக்க விரும்புவோர் www.tcs.com/careers/tcs-off-campus-hiring ‘ TCS Next Step Portal என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு 18 முதல் 28 வயதிற்குள் இருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு மூலமாக தேர்வு செய்யப்படுவர். நீங்கள் விண்ணப்பிக்கும் துறைகளில் பணிக்கு 3 மாதங்கள் வரை பணி அனுபவம் இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விண்ணப்பிக்கும் முறை குறித்த விவரங்களுக்கு 022-67784065 என்ற தொலைபேசி எண்ணைத் தொடர்புகொள்ளலாம்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here