3,500 ரூபாயில் JioPhone Next ஸ்மார்ட்போன் நவம்பரில் அறிமுகம் – ஆண்ட்ராய்டு 11 OS & 13 MP கேமரா!

0
3,500 ரூபாயில் JioPhone Next ஸ்மார்ட்போன் நவம்பரில் அறிமுகம் - ஆண்ட்ராய்டு 11 OS & 13 MP கேமரா!
3,500 ரூபாயில் JioPhone Next ஸ்மார்ட்போன் நவம்பரில் அறிமுகம் - ஆண்ட்ராய்டு 11 OS & 13 MP கேமரா!
3,500 ரூபாயில் JioPhone Next ஸ்மார்ட்போன் நவம்பரில் அறிமுகம் – ஆண்ட்ராய்டு 11 OS & 13 MP கேமரா!

இந்தியாவில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் அதன் புதிய படைப்பான ‘ஜியோபோன் நெக்ஸ்ட்’ என்னும் ஆண்ட்ராய்டு போனை அடுத்த மாதம் அறிமுகப்படுத்தவுள்ளது. இதன் விலை 3,500 ரூபாய் என கணிக்கப்பட்டுள்ளது.

ஜியோ ரிலையன்ஸ் நிறுவனம்:

ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் சேவை பிரிவே ஜியோ நிறுவனம் ஆகும். இந்த ஜியோ நிறுவனம் இந்திய அளவில் வாடிக்கையாளர்களுக்கு 4ஜி சேவைகளை வழங்கி வருகிறது. ஜியோ சேவை தொடங்கப்பட்டு 3 வருடங்களுக்குள்ளேயே 306 கோடி வாடிக்கையாளர்களை பெற்று சாதனை படைத்துள்ளது. எங்கு பார்த்தாலும் யாரை கேட்டாலும் ஜியோ தான் பயன்படுத்தி வருகிறார்கள். ஜியோ மற்றும் ரிலையன்ஸ் நிறுவனம் சேர்ந்து செயல்படுவது குறிப்பிடத்தக்கது. ஜியோ அறிமுகமான ஆண்டில் அன்லிமிடெட் டேட்டா மற்றும் அன்லிமிடெட் கால் போன்ற வசதிகளை கொடுத்தது. அதையும் முதல் ரிச்சார்ஜ் அந்த ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வந்தது. அதனாலே அந்த Network அதிக அளவில் பயன்படுத்தப்பட்டது. மேலும் 4ஜி சேவையை அளித்து வருகிறது.

ராதிகாவுடன் பிக்னிக் செல்லும் இனியா, மாட்டிக் கொள்ளாமல் தப்பிக்கும் கோபி – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!

அதனால் இன்டர்நெட் வேகம் அதிகமாக இருந்தது. அதன் அடிப்படையிலும் மக்கள் ஜியோ நெட்ஒர்க்கை பயன்படுத்துவதில் ஆர்வம் காட்டி வந்தனர். முதலில் சிம் கார்டு மட்டும் அறிமுகம் செய்தது. பின்னர் அதனை தொடர்ந்து ஜியோ மொபைல் அறிமுகம் செய்யப்பட்டது. அது 1,500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த மொபைல் சாமானிய மக்களும் பயன்படுத்தும் வகையில் விலையிலும், தரத்திலும் எளிமையாக இருந்தது. அதனால் ஜியோ நிறுவனத்திற்கு வாடிக்கையாளர்கள் அதிகரித்தனர். இவ்வாறாக மக்களுக்கு தொடர்ந்து புதிய மற்றும் சிறப்பான சேவைகளை வழங்கி வாடிக்கையாளர்களை கவர்ந்து வந்தது. அதனையடுத்து ஸ்மார்ட்போன் தயாரிப்பில் களம் இறங்கியுள்ள ஜியோ ரிலையன்ஸ் நிறுவனம் தன்னுடைய புதிய தயாரிப்பான ‘ஜியோபோன் நெக்ஸ்ட்’ ஸ்மார்ட்போனை அடுத்த நவம்பர் மாதம் இந்தியாவில் அறிமுகப்படுத்த இருக்கிறது.

தமிழக அரசு போக்குவரத்து கழகங்களில் 4,000 காலிப்பணியிடங்கள் – நியமனம் எப்போது?

இந்த ஸ்மார்ட்போனை வாடிக்கையாளர்களுக்கு குறைந்த விலையில் சந்தைப்படுத்த இருக்கிறது. 5.5 இன்ச் அளவு கொண்ட தொடுதிரை, ஸ்னாப்டிராகன் 215 ஜி, உள்ளக நினைவகம் 2 ஜிபி, கூடுதல் நினைவகம் 16 ஜிபி, பின்பக்கம் 13 எம்பி அளவுள்ள முதன்மை கேமரா, முன்பக்கம் 2 எம்பி அளவு செல்ஃபி கேமரா, 2500 எம்ஏஎச் பேட்டரி வசதி மற்றும் ஆன்டிராய்டு 11 ஒஎஸ் போன்ற சிறப்பு அம்சங்களை உள்ளடக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் விலை பற்றி அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. ஆனால் 3,500 ரூபாய்க்குள் இருக்கலாம் என விற்பனையாளர்கள் கூறியுள்ளனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!