Jio vs Airtel சிறந்த ப்ரீபெய்ட் ரீசார்ஜ் பிளான்கள் – விலை ஏற்றத்திற்கு பின்! பயனர்கள் கவனத்திற்கு!

0
Jio vs Airtel சிறந்த ப்ரீபெய்ட் ரீசார்ஜ் பிளான்கள் - விலை ஏற்றத்திற்கு பின்! பயனர்கள் கவனத்திற்கு!
Jio vs Airtel சிறந்த ப்ரீபெய்ட் ரீசார்ஜ் பிளான்கள் - விலை ஏற்றத்திற்கு பின்! பயனர்கள் கவனத்திற்கு!
Jio vs Airtel சிறந்த ப்ரீபெய்ட் ரீசார்ஜ் பிளான்கள் – விலை ஏற்றத்திற்கு பின்! பயனர்கள் கவனத்திற்கு!

ஏர்டெல் தனது ரீசார்ஜ் திட்டங்களின் விலையை அதிகரித்துள்ளது. இதனால் ஏர்டெல் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்த நிலையில் தற்போது ஜியோ மற்றும் ஏர்டெல் ஆகிய இரண்டு நெட்வொர்க் நிறுவனங்களின் வித்தியாசத்தை இப்பதிவில் காண்போம்.

ஏர்டெல் – ஜியோ:

இந்தியாவில் ஜியோ நிறுவனம் மிக குறைந்த காலத்தில் அதிக வளர்ச்சி அடைந்துள்ளது. இந்த நெட் ஒர்க் நிறுவனம் தொடங்கப்பட்ட போது மக்களுக்கு இலவசமாக ஜியோ சிம் கார்டுகளை வழங்கியது. மேலும் குறைந்த விலையில் ரீசார்ஜ் பிளன்களை அறிமுகப்படுத்தியது. இதனால் ஜியோ பயனர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. ஜியோ வந்த பிறகு மற்ற நெட்வொர்க் நிறுவனங்கள் சரியத் தொடங்கியது. இந்நிலையில் ஏர்டெல், வோடபோன், ஐடியா போன்ற நிறுவனங்கள் ஜியோக்கு நிகராக ரீசார்ஜ் பிளான்களை அறிமுகப்படுத்தி வருகிறது.

தமிழகத்தில் 5 ஏக்கருக்கு மேல் உள்ள விவசாயிகளின் கடன் தள்ளுபடி? உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு!

இந்நிலையில் ஏர்டெல் ப்ரீபெய்ட் சேவைக்கான கட்டணத்தை 25% வரை உயர்த்தியுள்ளது. இதனால் ஏர்டெல் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்த கட்டண உயர்வால் ஏர்டெல்லின் ரூ.79 திட்டம், ரூ.99 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. தற்போது ஏர்டெல்லின் திட்டங்கள் ஜியோவை விட விலை அதிகமாக உள்ளது. இதனால் ஏர்டெல் வாடிக்கையாளர்கள் ஜியோவுக்கு மாறலாம் என்று எண்ணிக் கொண்டிருக்கின்றனர். இப்போது ஏர்டெல் மற்றும் ஜியோ திட்டங்களை ஒப்பிட்டு பார்ப்போம்.

புதிய கட்டண உயர்வின் படி ஏர்டெல்லின் 79 ரூபாய் ரீசார்ஜ் திட்டம் ரூ.99 ஆக உயர்ந்துள்ளது. முன்பை விட தற்போது 20 ரூபாய் அதிகரித்துள்ளது. 200MB டேட்டா மற்றும் அன்லிமிடெட் வாய்ஸ் கால் ஆகிய நன்மைகளை 28 நாட்களுக்கு வழங்குகிறது. இதே 99 ரூபாய் ரீசார்ஜ் திட்டம் ஜியோவில் தினசரி 1.5 ஜிபி அன்லிமிட்டெட் காலிங் ஆகியவற்றை 14 நாட்களுக்கு அளிக்கிறது. இந்த திட்டத்தின் ஏர்டெல்லை விட அதிக நன்மைகள் உள்ளது.

TATA நிறுவனத்தில் 2,000 பேருக்கு வேலைவாய்ப்பு – தமிழகத்தில் ரூ.3,000 கோடி முதலீட்டில் ஆலை!

அடுத்ததாக ஏர்டெல்லில் 149 ரூபாய் திட்டம் 179 ஆகிவிட்டது. இதே திட்டம் ஜியோவிலும் உள்ளது. ஏர்டெல் 179 ரூபாய்க்கு 2 ஜிபி மட்டுமே வழங்குகிறது, ஜியோ தினசரி 1 ஜிபி அளிக்கிறது. இந்த திட்டம் ஏர்டெல்லை விட குறைவு தான். ஏர்டெல்லின் ரூ.399 திட்டம் தற்போது ரூ.479 ஆக உயர்ந்துள்ளது. இதில் தினமும் 1.5 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் காலிங், தினசரி 100 எஸ்எம்எஸ் ஆகியவற்றை 56 நாட்களுக்கு அளிக்கிறது. ஜியோவில் ரூ.399 ரீசார்ஜ் திட்டத்தில் மேற்கண்ட வசதிகள் அளிக்கப்படுகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here