Reliance Jio பயனர்கள் கவனத்திற்கு – ரூ.100க்கும் குறைவான விலையில் அசத்தலான ரீசார்ஜ் திட்டங்கள்!

0
Reliance Jio பயனர்கள் கவனத்திற்கு - ரூ.100க்கும் குறைவான விலையில் அசத்தலான ரீசார்ஜ் திட்டங்கள்!
Reliance Jio பயனர்கள் கவனத்திற்கு - ரூ.100க்கும் குறைவான விலையில் அசத்தலான ரீசார்ஜ் திட்டங்கள்!
Reliance Jio பயனர்கள் கவனத்திற்கு – ரூ.100க்கும் குறைவான விலையில் அசத்தலான ரீசார்ஜ் திட்டங்கள்!

இந்தியாவில் ஏராளமான மக்கள் ஜியோ தொலைத்தொடர்பு சேவைகளை பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் ரிலையன்ஸ் ஜியோ தங்கள் வாடிக்கையாளர்களுக்கு சூப்பரான ரீசார்ஜ் திட்டங்களை அறிமுகம் செய்து உள்ளது. அந்த வகையில் பயனர்கள் அன்லிமிடெட் காலிங், தினசரி டேட்டா மற்றும் எஸ்எம்எஸ் மற்றும் OTT நன்மைகளை ரூ.100 க்கும் குறைவான விலையில் பெறலாம். இந்த திட்டங்கள் குறித்து இப்பதிவில் பார்க்கலாம்.

அசத்தலான திட்டங்கள்:

முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் அதன் ஜியோ போன் பயனர்களுக்காக சிறந்த திட்டங்களை வழங்குகிறது.மேலும் பல மலிவான ப்ரீபெய்ட் மற்றும் போஸ்ட்பெய்ட் திட்டங்களைக் கொண்டு வந்துள்ளது. இதில் பயனர்கள் பல நன்மைகளைப் பெறுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. கொரோனா வருகைக்கு பின் பல நிறுவன ஊழியர்கள் வீட்டில் இருந்து வேலை பார்க்கும் முறைக்கு மாறியுள்ளனர். இதனால் பல்வேறு பணிகளுக்கு இணையத்தை அதிக அளவில் பயன்படுத்த வேண்டிய நிலை உருவாகியுள்ளது.

மத்திய அரசு ஓய்வூதியதாரர்கள் கவனத்திற்கு – அரசின் விளக்கம்!

ஜியோ ரூ 75 திட்டம்: ஜியோ நிறுவனத்தின் 75 ரூபாய் திட்டம் 23 நாட்கள் வேலிடிட்டி கொண்டது. இந்த திட்டத்தில், நாள் ஒன்றுக்கு 100 எம்பி மற்றும் 200 எம்பி கூடுதல் டேட்டா கிடைக்கும். இந்த திட்டத்தில் ஒட்டுமொத்தமாக 2.5 ஜிபி இணையம் கிடைக்கிறது. உங்கள் தினசரி டேட்டா வரம்பு தீர்ந்து விட்டால், அதன் பிறகும் அன்லிமிடெட் இணையத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம் ஆனால் அதன் வேகம் 64Kbps ஆகக் குறைக்கப்படும். மேலும் இந்த திட்டத்தில் எந்த நெட்வொர்க்கிற்கும் அன்லிமிடெட் காலிங், மொத்தம் 50 எஸ்எம்எஸ் மற்றும் இந்த திட்டத்தில் உள்ள அனைத்து ஜியோ பயன்பாடுகளுக்கான சந்தாவும் அடங்கும்.

Exams Daily Mobile App Download

ஜியோ ரூ. 91 திட்டம்: இந்த திட்டத்தை தேர்ந்தெடுக்கும் வாடிக்கையாளர்கள் 100 எம்பி இணையத்தையும், 200 எம்பி கூடுதல் டேட்டாவையும் வழக்கமான அடிப்படையில் பெறுவார்கள். 28 நாட்கள் வேலிடிட்டியுடன், உங்களுக்கு மொத்தம் 3 ஜிபி டேட்டா வழங்கப்படும். இந்த திட்டத்தில் நீங்கள் 50 எஸ்எம்எஸ்களை இலவசமாக அனுப்பலாம். எந்த நெட்வொர்க்கிற்கும் வரம்பற்ற குரல் அழைப்பை பெற முடியும். இருப்பினும் இந்த திட்டங்களைப் பயன்படுத்திக் கொள்ள உங்களிடம் ஜியோ போன் இருக்க வேண்டும். இந்த இரண்டு திட்டங்களும் ஜியோ போன் பயனர்களுக்கு மட்டுமே கிடைக்கும்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!