Reliance Jio வாடிக்கையாளர்களுக்கு ப்ரீபெய்ட் திட்டங்கள் – கேஷ்பேக் உடன்!

0
Reliance Jio வாடிக்கையாளர்களுக்கு ப்ரீபெய்ட் திட்டங்கள் - கேஷ்பேக் உடன்!
Reliance Jio வாடிக்கையாளர்களுக்கு ப்ரீபெய்ட் திட்டங்கள் - கேஷ்பேக் உடன்!
Reliance Jio வாடிக்கையாளர்களுக்கு ப்ரீபெய்ட் திட்டங்கள் – கேஷ்பேக் உடன்!

ஜியோவின் அதிகாரப்பூர்வ இணைய பக்கங்கள் மூலம் ரீசார்ஜ் செய்தால் ப்ரீபெய்டு திட்டங்களில் 20% வரை கேஷ்பேக் பெறும் ஆஃபர் உள்ளது.

ஜியோ திட்டங்கள்:

ஜியோ நிறுவனம் தொடங்கி சில நாட்களிலேயே அதிவேக வளர்ச்சியை அடைந்துள்ளது. தனது விலை குறைந்த ரீசார்ஜ் திட்டங்கள் மூலம் வாடிக்கையாளர்களை கவர்ந்து வருகிறது. கடந்த மாதங்களில் நிலவிய கொரோனா ஊரடங்கால் வீட்டில் இருந்து இன்டர்நெட் மூலம் பணிபுரியும் ஊழியர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. அதனால் ஜியோ நிறுவனம் அதிக டேட்டா தரும் புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தி வாடிக்கையாளர்களுக்கு உதவியது. ஜியோவின் விலை குறைந்த திட்டமான 98 ரூபாய் ரீசார்ஜ் திட்டத்தை புதிய வடிவில் அறிமுகபடுத்தப்பட்டது.

ஆப்கனில் ஆண்கள் தாடியை ஷேவ், ட்ரிம் செய்ய தடை – தாலிபான்கள் உத்தரவு!

மேலும் ஜியோ தனது வாடிக்கையாளர்கள் வசதிக்காக வீட்டில் இருந்து ஆன்லைன் மூலம் ஜியோ சிம் வாங்கும் வசதியை அளித்துள்ளது. அதனை தொடர்ந்து தற்போது புதிய அறிவிப்பாக ஜியோ சில ப்ரீபெய்டு திட்டத்துடன் கேஷ்பேக் ஆபரை அறிவித்துள்ளது. ரூ.249, ரூ.555 மற்றும் ரூ.599 ஆகிய மூன்று திட்டங்களுக்கும் கேஷ்பேக் ஆஃபர் உள்ளது. இந்த மூன்று திட்டங்களில் அதிகபட்சம் 20 சதவிகிதம் கேஷ்பேக் கிடைக்கும். அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் ரீசார்ஜ் செய்தால் மட்டுமே இந்த கேஷ்பேக் கிடைக்கும்.

குதிரையுடன் எல்லைக்குள் நுழைந்த சீன வீரர்கள் – உத்தரகண்டில் பதற்றம்!

ஜியோவின் 249 ரூபாய் ரீசார்ஜ் திட்டம் தினசரி 2 ஜிபி டேட்டா, 100 எஸ்எம்எஸ், அனைத்து நெட்வொர்க்களிலும் அன்லிமிடெட் கால்ஸ், ஜியோ செயலிகளின் சந்தா ஆகியவற்றை 28 நாட்களுக்கு அளிக்கிறது. மேலும் 555 ரூபாய் ரீசார்ஜ் பிளானில் தினமும் 1.5 டேட்டா, அன்லிமிடெட் கால்ஸ், 100 எஸ்எம்எஸ், ஜியோ செயலிகளின் சந்தா ஆகியவற்றை 84 நாட்களுக்கு வழங்குகிறது. 599 ரூபாய் திட்டத்தில் தினமும் 2 ஜிபி டேட்டா மற்றும் மேற்கண்ட திட்டங்களில் உள்ள அதே நன்மைகளை 84 நாட்களுக்கு அளிக்கிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!