செப்.10 முதல் விற்பனைக்கு வரும் Jio Phone Next? விலை உள்ளிட்ட விவரங்கள் வெளியீடு!

0
செப்.10 முதல் விற்பனைக்கு வரும் Jio Phone Next? விலை உள்ளிட்ட விவரங்கள் வெளியீடு!
செப்.10 முதல் விற்பனைக்கு வரும் Jio Phone Next? விலை உள்ளிட்ட விவரங்கள் வெளியீடு!
செப்.10 முதல் விற்பனைக்கு வரும் Jio Phone Next? விலை உள்ளிட்ட விவரங்கள் வெளியீடு!

இந்தியாவின் முன்னணி தொலைத் தொடர்பு நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ தயாரித்துள்ள மலிவு விலையிலான ஸ்மார்ட் போன்கள் வரும் செப்டம்பர் 10 ஆம் தேதி முதல் விற்பனைக்கு வர உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஜியோ போன்

இந்தியாவில் அதிகளவு வாடிக்கையாளர்களை கொண்டுள்ள ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் அனைத்து வகையான பயன்பாட்டாளர்களுக்கும் உரிய ஒரு மலிவு விலை ஸ்மார்ட் போனை அறிமுகம் செய்ய இருப்பதாக சமீபத்தில் அறிவித்திருந்தது. அதன்படி ஜியோ போன் நெக்ஸ்ட் என்று அழைக்கப்படக் கூடிய புதிய வகை ஸ்மார்ட் போன்களை, ரிலையன்ஸ் ஜியோ மற்றும் கூகுள் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன்கள் இம்மாதம் 10 ஆம் தேதியன்று அறிமுகம் செய்யப்பட உள்ளதாக சமீபத்திய தகவல்கள் கூறுகிறது.

தொழிற்கல்வி படிப்புகள் வழங்கும் நிறுவனங்களுக்கு முக்கிய அறிவிப்பு!

ஜியோ போன் நெக்ஸ்ட், ஸ்மார்ட்போன் சந்தையில் விற்பனை செய்யப்படும் போன்களில் மிகவும் மலிவானதாக இருக்கும் என கூறப்பட்டுள்ளது. ஆனால், இதன் விற்பனை ஒரு விரிவான அமைப்பின் கீழ் செய்யப்பட உள்ளது. இதனுடன் ரிலையன்ஸ் ஜியோ, பல இந்திய வங்கிகள் மற்றும் கடன் வழங்கும் கூட்டாளர்களுடன் சேர்ந்து பல்வேறு கட்டண முறைகளின் மூலம் ஜியோ போன் நெக்ஸ்ட் மாடலை விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது. அந்த வகையில் ஜியோ தொலைத்தொடர்பு நிறுவனம், SBI, HDFC, IDFC First Assure, மற்றும் DMI நிதி நிறுவனத்துடன் ஒத்துழைக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

அந்த வகையில் அடுத்த 6 மாதங்களில் 50 மில்லியன் யூனிட்களை விற்பனை செய்வதன் மூலம் ஜியோ அதன் வணிகத்தை ரூ.10,000 கோடி உயர்த்த திட்டமிட்டுள்ளது. இது தவிர ஜியோபோன் நெக்ஸ்ட் மாடலின் ஆரம்ப விலைகளை பொருத்தளவு, ரூ .5,000 ஆக இருக்கலாம் எனவும் ஜியோபோன் நெக்ஸ்ட் அட்வான்ஸ் மாடல்களின் ஆரம்ப விலை ரூ.7,000 என நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட் போன்களை மொத்த தொகையை செலுத்தியும் அல்லது மொத்தவிலையில் 10 சதவிகிதத்தை மட்டுமே செலுத்தியும் பெற்றுக் கொள்ள முடியும்.

தமிழக பள்ளி மாணவிகள் 3 பேருக்கு கொரோனா உறுதி – பள்ளிகளை மூட வாய்ப்பு?

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், தனது வாடிக்கையாளர்களுக்கு கடன் பெறுவதற்கான விருப்பங்களை வழங்க NBFC எனப்படும் வங்கி சாரா நிதி நிறுவனங்களுடன் இணைந்துள்ளது. இந்த கடன் ஆதரவு ஒப்பந்தங்களுக்காக ரூ.2,500 கோடி செலவிட இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் ஜியோபோன் நெக்ஸ்டுக்கான ஆரம்ப விலை ரூ.5,000 என்று குறிப்பிடப்பட்டிருந்தாலும், அதன் விலை ரூ.3,499 ஆக நிர்ணயிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இருந்தாலும் இதன் உண்மையான விலை குறித்த தகவல்கள் விற்பனை துவங்கும் போது வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!