Reliance Jioவின் சிறந்த 4 திட்டங்கள் – தினசரி அன்லிமிடெட் கால்கள், 3 ஜிபி டேட்டாவுடன்!

0
Reliance Jioவின் சிறந்த 4 திட்டங்கள் - தினசரி அன்லிமிடெட் கால்கள், 3 ஜிபி டேட்டாவுடன்!
Reliance Jioவின் சிறந்த 4 திட்டங்கள் - தினசரி அன்லிமிடெட் கால்கள், 3 ஜிபி டேட்டாவுடன்!
Reliance Jioவின் சிறந்த 4 திட்டங்கள் – தினசரி அன்லிமிடெட் கால்கள், 3 ஜிபி டேட்டாவுடன்!

ஜியோ நிறுவனம் தினசரி 3 ஜிபி டேட்டா வழங்கும் சிறப்பான 4 திட்டங்களை வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகிறது. இந்த திட்டங்களை பற்றி இந்த பதிவில் காண்போம்.

ஜியோ ப்ரீபெய்டு திட்டங்கள்:

ஜியோ நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு பல வகையிலான சலுகைகளுடன் கூடிய திட்டங்களை வழங்கி வருகிறது. தற்போதைய ஊரடங்கு காலத்தில் நாம் நமது சொந்தங்கள் மற்றும் நண்பர்களுடன் நேரில் சந்திக்க முடியாத சூழலில் நமக்கு பெரிதும் உதவியாக இருப்பது இணையம் தான். இணையத்தின் வழியாக அவர்களை தொடர்பு கொள்ள பல வசதிகள் தற்போது உள்ளது. மேலும், ஊரடங்கு காலத்தில் பலரும் வீட்டில் இருந்து வேலை செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது.

ஒரு நாள் கைதியாக விருப்பமா? ரூ.500 கட்டணம்! கர்நாடகாவில் நூதன அறிவிப்பு!

இதனால் நமக்கு தினசரி அதிக அளவிலான இணையம் தேவைப்படுகிறது. ஜியோ நிறுவனம் தினசரி அதிக டேட்டா, இலவச அன்லிமிடெட் கால்கள் மற்றும் எஸ்எம்எஸ் ஆகியவற்றுடன் கூடிய 4 ஆல் இன் ஒன் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வருகிறது. இந்த திட்டங்களின் முழு பலன்கள் மற்றும் விவரங்களும் கீழே கொடுக்கப்பட்டுளள்து.

ரூ.349 ரீசார்ஜ் திட்டம்:

ஜியோ ரூ.349 ரீசார்ஜ் திட்டம் 28 நாட்கள் வேலிடிட்டியில் கிடைக்கிறது. இந்த திட்டத்தில் தினசரி 3 ஜிபி டேட்டா உடன் நாடு முழுவதும் உள்ள அனைத்து நெட்வொர்க்குக்கும் அன்லிமிடெட் கால்கள் மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் போன்ற நன்மைகளும் கிடைக்கும். இதனுடன் கூடுதலாக லைவ் டிவி, மியூசிக் ஸ்ட்ரீமிங் மற்றும் ஜியோ பயன்பாடுகளுக்கான அணுகலும் வழங்கப்படுகிறது.

ரூ.401 ரீசார்ஜ் திட்டம்:

ஜியோ வின் ரூ.401 திட்டம் 28 நாட்கள் வேலிடிட்டியில் கிடைக்கிறது. இந்த திட்டத்தில் தினசரி 3 ஜிபி டேட்டா உடன் நாடு முழுவதும் உள்ள அனைத்து நெட்வொர்க்குக்கும் அன்லிமிடெட் கால்கள் மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் போன்ற நன்மைகளுடன் கிடைக்கும். கூடுதலாக ஜியோ செயலிகளுக்கு இலவச அணுகல் மற்றும் ஒரு வருடத்திற்கான ஹாட்ஸ்டார் விஐபி சந்தா இலவசமாக கிடைக்கிறது.

TN Job “FB  Group” Join Now

ரூ.999 ரீசார்ஜ் திட்டம்:

இந்த திட்டத்தில் 84 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது. தினசரி 3 ஜிபி அதிவேக இணையம், இலவச கால்கள், 100 எஸ்எம்எஸ் மற்றும் ஜியோ செயலிகளின் இலவச சந்தாவுடன் இந்த திட்டம் வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கிறது. ரூ.349 திட்டத்திற்கும், இந்த திட்டத்திற்கும் இடையில் உள்ள ஒரே வித்தியாசம் வேலிடிட்டி மட்டும் தான்.

ரூ.3,499 ரீசார்ஜ் திட்டம்:

இந்த திட்டம் ஜியோவின் நீண்ட கால திட்டமாக உள்ளது. இதில், தினசரி 3 ஜிபி டேட்டா நன்மையுடன் வருகிறது. இந்த திட்டம் 365 நாட்கள் செல்லுபடியாகும் வேலிடிட்டியில் கிடைக்கிறது. அன்லிமிடெட் கால்கள் மற்றும் 100 எஸ்எம்எஸ் இலவசமாக கிடைக்கிறது. இதனுடன் கூடுதலாக ஜியோ டிவி, ஜியோ சாவ்ன் மற்றும் நிறுவனத்தின் மற்ற பயன்பாடுகளுக்கான சந்தாவும் இலவசமாக கிடைக்கிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!