Jio-வின் மலிவு விலை 5ஜி ஸ்மார்ட்போன்கள் விரைவில் அறிமுகம் – வெளியான அதிரடி அறிவிப்பு!

0
Jio-வின் மலிவு விலை 5ஜி ஸ்மார்ட்போன்கள் விரைவில் அறிமுகம் - வெளியான அதிரடி அறிவிப்பு!
Jio-வின் மலிவு விலை 5ஜி ஸ்மார்ட்போன்கள் விரைவில் அறிமுகம் – வெளியான அதிரடி அறிவிப்பு!

மக்கள் மத்தியில் ஸ்மார்ட் போன் மோகம் அதிகமாக இருக்கும் நிலையில், ஜியோ நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு, குறைந்த விலையில் 5ஜி போன்களை அறிமுகம் செய்ய இருப்பதாக தெரிவித்துள்ளது. குறைந்த விலையில் 5ஜி ஸ்மார்ட் போன் குறித்த முழு விவரத்தை இந்த பதிவில் பார்க்கலாம்.

5ஜி ஸ்மார்ட் போன்:

இந்தியாவில் வருகிற அக். 1 ஆம் தேதி மொபைல் காங்கிரஸ் தொடக்க விழாவில் 5ஜி சேவையை பிரதமர் மோடி தொடக்கி வைக்க இருக்கிறார். இந்நிலையில் ஜியோ, ஏர்டெல், வோடஃபோன் ஐடியா, அதானி குழுமத்தின் அதானி டேட்டா நெட்வர்க் என 4 நிறுவனங்கள் 5ஜி ஏலத்தில் கலந்து கொண்டனர். மேலும் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், 5ஜி சேவை தொடங்கப்பட்டு நல்ல வளர்ச்சி அடைந்த உடன் குறைந்த விலையில் 5ஜி ஸ்மார்ட் போன்களை அறிமுகம் செய்ய இருப்பதாக தெரிவித்துள்ளது.

அதாவது 5ஜி சேவை நல்ல வரம்பை அடைந்ததும், ரூ.8,000 முதல் ரூ.12,000 மதிப்புள்ள ஸ்மார்ட்போனை விற்பனை செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இது குறித்து தி கௌண்டர்பாயிண்ட் ரிசர்ஜ் நடத்திய ஆய்வில், 2ஜி வசதிகொண்ட ஸ்மார்ட்ஃபோன் பயனர்களை கூகுளுடன் இணைத்து உருவாக்கிய, ஜியோ ஃபோன் நெக்ஸ்ட் 4ஜி ஸ்மார்ட்போன்கள், மூலமாக ஜியோ நிறுவனம் 4ஜி நெட்வொர்க்கில் நல்ல மதிப்பை பெற்றது, இதே முறையை தொடர்ந்து 5ஜி சேவைக்கு பயன்படுத்த இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

மாநில காவல்துறையில் 20,000 புதிய நியமனம் – துணை முதல்வர் அறிவிப்பு!

Exams Daily Mobile App Download

ஜியோவின் வளர்ச்சிக்கு இருமுனை உத்தி மிகமுக்கிய பங்கு வகிப்பதால் இந்த நிறுவனம் இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2023 ஆம் ஆண்டிற்குள்  இந்தியாவில் எல்லா நகரங்களிலும் 5ஜி சேவை கொண்டுவரப்பட இருக்கும் நிலையில், 2024 ஆம் ஆண்டில் மலிவு விலையில் 5ஜி mmWave+sub+6GHz ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்வதன் மூலமாக ஸ்மார்ட் போன் வர்த்தகத்தில் ஜியோ முதலிடத்திற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!