Reliance Jio Book விரைவில் அறிமுகம் – என்னென்ன வசதிகள்? எகிறும் எதிர்பார்ப்பு!

0
Reliance Jio Book விரைவில் அறிமுகம் - என்னென்ன வசதிகள்? எகிறும் எதிர்பார்ப்பு!
Reliance Jio Book விரைவில் அறிமுகம் - என்னென்ன வசதிகள்? எகிறும் எதிர்பார்ப்பு!
Reliance Jio Book விரைவில் அறிமுகம் – என்னென்ன வசதிகள்? எகிறும் எதிர்பார்ப்பு!

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ஜியோ நெஸ்ட் மொபைல் போன் வெளியிட தயாராக உள்ள நிலையில் தற்போது நீண்ட நாட்களாக எதிர்பார்த்த JioBook லேப்டாப் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

JioBook லேப்டாப்:

முன்னணி நிறுவனமாக இயங்கி வரும் ஜியோ நிறுவனம் தற்போது புதிய மொபைல் போனை அறிமுகப்படுத்துகிறது. ஜியோ நிறுவனத்தின் வருகையால் இன்டர்நெட் பயன்படுத்தும் அளவு அதிகமாகியுள்ளது. அதனை தொடர்ந்து ஜியோ நிறுவனம் பட்டன் போன் ஒன்றை அறிமுகம் செய்தது. தற்போது இந்திய மொபைல் போன் மற்றும் மொபைல் நெட்வொர்க் சந்தையில் தனக்கென ஒரு அங்கீகாரத்தை உருவாக்கி வருகிறது ஜியோ நிறுவனம்.

1 முதல் 8ம் வகுப்புகளுக்கு மீண்டும் பள்ளிகள் திறப்பு – மாநில அரசு உத்தரவு!

ஜியோ நெக்ஸ்ட் என்னும் மொபைல் அறிமுகம் செய்ய தயாராகும் நிலையில் JioBook லேப்டாப் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது. JioBook லேப்டாப் இந்தியாவில் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது இன்டர்னல் மாடல் பெயர்கள் வெளியாகியுள்ளது. JioBook ஆனது 4G LTE கனெக்ஷன், ஸ்னாப்டிராகன் பிராசஸர், 4GB LPDDR4x ரேம் மற்றும் 64GB வரை இன்டர்னல் ஸ்டோரேஜ் முதலியன வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழக அரசு கட்டிடங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கான வசதிகள் – நீதிமன்றம் உத்தரவு!

BIS தளத்தில் NB1118QMW, NB1148QMW, மற்றும் NB1112MM – என்கிற 3 வகையிலான ஜியோ புக் லேப்டாப் காணப்பட்டுள்ளது. இதில் HD (1,366×768 பிக்சல்கள்) டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் எக்ஸ் 12 4 ஜி மோடம் உடன் இணைக்கப்பட்ட ஸ்னாப்டிராகன் 665 SoC மூலம் இயக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் 4GB LPDDR4x RAM மற்றும் 64GB வரை eMMC இன்டர்னல் ஸ்டோரேஜையும் கொண்டு இருக்கலாம் எனவும் தகவல்கள் வெளியாகி வருகிறது. இதன் விலை குறித்த விவரங்கள் ஏதும் வெளியிடப்படவில்லை. ஆனால் ஜியோ நிறுவனம் குறைந்த விலையில் தரமான பொருளை வழங்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இந்த ஆண்டின் இறுதிக்குள் JioBook லேப்டாப் வெளியிடப்படும் என கூறப்படுகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!