Jio, Airtel, VI வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – ரூ.500க்கு குறைவான ப்ரீபெய்ட் திட்டங்கள்!

0
Jio, Airtel, VI வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு - ரூ.500க்கு குறைவான ப்ரீபெய்ட் திட்டங்கள்!
Jio, Airtel, VI வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு - ரூ.500க்கு குறைவான ப்ரீபெய்ட் திட்டங்கள்!
Jio, Airtel, VI வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – ரூ.500க்கு குறைவான ப்ரீபெய்ட் திட்டங்கள்!

தற்போது ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன் உள்ளிட்ட நிறுவனங்கள் தனது வாடிக்கையாளர்களுக்கு நீண்ட காலம் செல்லுபடியாகும் வகையில் ரூ. 500 என்ற பட்ஜெட்க்கும் குறைவான சில சிறந்த ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்களை அறிவித்துள்ளது.

ப்ரீபெய்ட் திட்டங்கள்

இந்தியாவின் முன்னணி டெலிகாம் நிறுவனங்களான ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன் ஆகியவை தனது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சலுகைகளுடன் கூடிய பல ப்ரீபெய்ட் திட்டங்களை வழங்குகின்றன. அந்த வகையில் இந்த நிறுவனங்கள் 500 ரூபாய்க்கு கீழ் பல ரீசார்ஜ் திட்டங்களை சிறப்பான சலுகையுடன் கொடுக்கிறது. ஆனால், எந்த டெலிகாம் ஆபரேட்டரும் 60 நாட்கள் வேலிடிட்டியுடன் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கவில்லை என்பதை வாடிக்கையாளர்கள் நினைவில் கொள்ளவும். அதற்கு பதிலாக சுமார் 56 நாட்கள் செல்லுபடியாகும் ப்ரீபெய்ட் பேக்குகளை இந்நிறுவனங்கள் வழங்குகிறது.

SBI வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – KYC குறித்த முக்கிய எச்சரிக்கை!

அந்த வகையில் 2 மாதங்கள் வரை செல்லுபடியாகும் நாட்களுடன் வாடிக்கையாளர்கள் தங்களின் பட்ஜெட் ரூ.500க்கு குறைவாக இருக்கும் ரீசார்ஜ் திட்டங்களில் செலுத்தலாம். அதன்படி, ரூ.500க்கும் கீழ் பட்ஜெட் கொண்ட வாடிக்கையாளர்கள் ஜியோவின் ரூ.479 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தை தேர்வு செய்யலாம். இந்த திட்டம் அனைத்து நெட்வொர்க்கிற்கும் அன்லிமிடெட் கால்ஸ் மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் சேவைகளுடன் வருகிறது. மேலும் ஒருவர் தினசரி 1.5 ஜிபி டேட்டாவை இதன் மூலம் பெறலாம். அதாவது பயனர்கள் மாதாந்திர அடிப்படையில் மொத்தம் 84 ஜிபி டேட்டாவை பெற முடியும்.

மேலும் இந்த ரூ.479 ப்ரீபெய்ட் திட்டம் JioTV ஆப்ஸ் மற்றும் JioCinema செயலிக்கான இலவச அணுகலுடன் கிடைக்கிறது. அடுத்ததாக ஏர்டெல் நிறுவனமும் இதேபோன்ற ரீசார்ஜ் திட்டத்தை வழங்குகிறது. ஆனால் ரிலையன்ஸ் ஜியோவை விட இதில் அதிக நன்மை கிடைக்கும். அந்த வகையில் ரூ.479 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தில் தினசரி 1.5ஜிபி டேட்டா, அன்லிமிடெட் கால்ஸ், ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் மற்றும் பாஸ்டேக்கில் ரூ.100 கேஷ்பேக் வழங்கப்படுகிறது. தவிர அப்பல்லோவில் மூன்று மாதங்களுக்கு இலவச அணுகல், Wynk Music மற்றும் HelloTunesக்கான இலவச அணுகல் இதில் கிடைக்கும்.

Exams Daily Mobile App Download

இறுதியாக வோடபோனின் ரீசார்ஜ் திட்டம் சற்று வித்தியாசமான நன்மைகளுடன் ரூ.479 ப்ரீபெய்ட் பேக்கை கொண்டுள்ளது. இது ஒரு நாளைக்கு 1.5 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் கால்ஸ் மற்றும் 56 நாட்கள் செல்லுபடி காலத்துடன் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் ஆகியவற்றுடன் வருகிறது. இது தவிர வோடபோனில் நள்ளிரவு 12:00 முதல் அதிகாலை 6:00 மணிவரை வரம்புகள் இல்லாமல் இலவச இரவு டேட்டாவையும் ஒருவர் பெறுலாம். கூடுதலாக, வோடபோன் ஒவ்வொரு மாதமும் 2ஜிபி வரையிலான பேக்கப் டேட்டாவை கூடுதல் கட்டணமின்றி வழங்குகிறது குறிப்பிடத்தக்கது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!