Reliance Jio, Airtel பயனர்களுக்கான ஹாப்பி நியூஸ் – புதிய ரீசார்ஜ் பிளான் அறிமுகம்!

0
Reliance Jio, Airtel பயனர்களுக்கான ஹாப்பி நியூஸ் - புதிய ரீசார்ஜ் பிளான் அறிமுகம்!
Reliance Jio, Airtel பயனர்களுக்கான ஹாப்பி நியூஸ் - புதிய ரீசார்ஜ் பிளான் அறிமுகம்!
Reliance Jio, Airtel பயனர்களுக்கான ஹாப்பி நியூஸ் – புதிய ரீசார்ஜ் பிளான் அறிமுகம்!

நாட்டின் 75 ஆவது சுதந்திர தினத்தையொட்டி ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனம் பல சிறப்பான ரீசார்ஜ் திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது. மேலும், ஒவ்வொரு ரீசார்ஜ் திட்டத்திற்கும் பல சலுகைகள் மற்றும் கேஷ்பேக் பலன்கள் வழங்கப்பட்டுள்ளது.

ரீசார்ஜ் பிளான்:

நாட்டின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் நாட்டின் 75வது சுதந்திர தினத்தை சிறப்பாக கொண்டாடும் விதமாக சிறப்பான ரீசார்ஜ் திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது. ஜியோ நிறுவனம் ரூ. 2,999 மற்றும் ரூ. 719 ஆகிய இரண்டு எக்ஸ்க்ளூசிவ் ஆஃபர்களை அறிமுகம் செய்துள்ளது. மேலும், இந்த திட்டத்தின் மூலமாக 100 சதவீத கேஷ்பேக் பலன்களும் வழங்கப்படுகிறது. அதே போல ஏர்டெல் நிறுவனமும் ரூ.519 மற்றும் ரூ.779 ரீசார்ஜ் திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது.

தமிழகத்தில் PSTM சான்று பதிவேற்றம் செய்ய கால அவகாசம் நீட்டிப்பு? வலுக்கும் கோரிக்கை!

தற்போது ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனம் அறிமுகம் செய்துள்ள ரீசார்ஜ் திட்டத்தில் உள்ள பலன்களை பார்க்கலாம். முதலில் ஜியோ அறிமுகம் செய்துள்ள ஒரு வருடத்திற்கு செல்லுபடியாகும் ரூ. 2,999 திட்டத்தில் ஒரு நாளைக்கு 100 SMS, JioTV, JioCloud, JioCinema மற்றும் JioSecurity ஆகிய சேவைகளும் வழங்கப்படுகிறது. அதே போல 1 வருடத்திற்கு Disney+ Hostart வசதி, 100 சதவீத கேஷ்பேக், ரூ. 750 மதிப்புள்ள 75GB கூடுதல் டேட்டா மற்றும் ரூ.750 மதிப்புள்ள Ajio, Netmeds மற்றும் Ixigoன் சலுகைகளும் வழங்கப்படுகிறது. இதனையடுத்து, ரூ. 750 ரீசார்ஜ் திட்டத்தில் ஒரு நாளைக்கு 2ஜிபி டேட்டா, ஒரு நாளைக்கு 100 SMS, வரம்பற்ற குரல் அழைப்பு, 100MB கூடுதல் டேட்டா மற்றும் JioTV, JioSecurity, JioCinema மற்றும் iCloud ஆகிய சலுகைகளும் வழங்கப்படுகிறது.

அடுத்ததாக 90 நாட்கள் செல்லுபடியாகும்படியான ரூ. 779 ஏர்டெல் ரீசார்ஜ் திட்டத்தில் தினசரி 1.5ஜிபி டேட்டா, ஒரு நாளைக்கு 100 SMS, மூன்று மாதத்திற்கான Hellotunes, Wynk Music, Apollo Circle சேவை, FASTag டெலிவரிக்கு ரூ.100 கேஷ்பேக் ஆகிய சலுகைகள் வழங்கப்படுகிறது. மேலும், 60 நாட்கள் செல்லுபடியாகும்படியான ரூ 519 ரீசார்ஜ் திட்டத்தில் தினசரி 1.5ஜிபி டேட்டா, ஒரு நாளைக்கு 100 SMS, இலவச ஹெலோட்யூன்ஸ் மற்றும் விங்க் மியூசிக், மூன்று மாதத்திற்கான அப்பல்லோ இலவச சேவை மற்றும் ரூ.100 கேஷ்பேக் வழங்கப்படுகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!