Jio, Airtel மற்றும் VI நிறுவனங்களின் ரூ.398 ப்ரீபெய்ட் திட்டம் – BSNL உடன் ஒப்பீடு!

0
Jio, Airtel மற்றும் VI நிறுவனங்களின் ரூ.398 ப்ரீபெய்ட் திட்டம் - BSNL உடன் ஒப்பீடு!
Jio, Airtel மற்றும் VI நிறுவனங்களின் ரூ.398 ப்ரீபெய்ட் திட்டம் - BSNL உடன் ஒப்பீடு!
Jio, Airtel மற்றும் VI நிறுவனங்களின் ரூ.398 ப்ரீபெய்ட் திட்டம் – BSNL உடன் ஒப்பீடு!

தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்களை தக்க வைத்துக் கொள்வதற்காக பல சலுகைகளையும் அறிவித்து வருகிறது. இந்நிலையில் அரசின் BSNL நிறுவனம் ரூ.398 க்கு பல சேவைகளையும் வழங்குவதாக அறிவித்துள்ளது.

சலுகைகள்:

அரசுக்கு சொந்தமான டெல்கோ பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட் (பிஎஸ்என்எல்) ரூ.398 விலையில் ப்ரீபெய்ட் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இந்த திட்டம் குறிப்பிட்ட எந்த ஒரு தினசரி கட்டுப்பாடும் இல்லாமல் அன்லிமிடெட் டேட்டாவை வழங்குகிறது. தனியார் நிறுவங்கள் 60 நாட்கள் வேலிடிட்டி வழங்கி வரும் நிலையில், BSNL 30 நாட்கள் வேலிடிட்டியை இந்த திட்டத்திற்கு வழங்குகிறது. அன்லிமிடெட் டேட்டா மற்றும் ரோமிங் கால்களையும் வழங்குகிறது. தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் இந்த தொகையில் வேறு பல சலுகைகளையும் வழங்கி வருகிறது.

மற்ற திட்டங்கள்:

டெல்லி மற்றும் மும்பையில் உள்ள எம்.டி.என்.எல் நெட்வொர்க் தேசிய ரோமிங் மற்றும் அன்லிமிடெட் உள்நாட்டு அழைப்புகளுடன் அன்லிமிடெட் டேட்டாவையும் வழங்குகிறது. இதில் தினமும் 100 எஸ்.எம்.எஸ் வசதிகளும் வழங்கப்படுகிறது.

TN Job “FB  Group” Join Now

இந்நிலையில் ஜியோ நிறுவனம் 5 புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. அதில், ரூ.247க்கு 25 ஜிபி டேட்டாவை 30 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்குகிறது. மேலும் ரூ.500 க்கு குறைவான பிரபலமான நிறுவங்களின் திட்டங்களை குறித்து கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ஜியோ ரூ.349 ப்ரீபெய்ட் திட்டம்:

ஜியோ நிறுவனத்தின் ரூ 349 ப்ரீபெய்ட் திட்டத்தில், ஒரு நாளைக்கு 3 ஜிபி டேட்டா மற்றும் அன்லிமிடெட் கால்களுடன் 28 நாட்களுக்கு செல்லுபடியாகும். இந்த பேக் மூலமாக பல ஜியோ பயன்பாடுகளின் சந்தாக்களும் இலவசமாக கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஏர்டெல் ரூ.398 ப்ரீபெய்ட் திட்டம்:

ஏர்டெல் ரூ.398 ப்ரீபெய்ட் திட்டத்தில் ஒரு நாளைக்கு 3 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் அழைப்புகள் மற்றும் 100 எஸ்எம்எஸ்களும் 28 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. மேலும், விங்க் மியூசிக் மற்றும் ஷா அகாடமியின் சந்தா மற்றும் ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் பிரீமியத்தின் சந்தாவும் கிடைக்கிறது. வாடிக்கையாளர்களுக்கு இலவச ஹலோ டியூன்ஸ் மற்றும் ஃபாஸ்டாக் பரிவர்த்தனைகளில் ரூ.150 கேஷ்பேக் கிடைக்கிறது.

Vi Rs 401 ப்ரீபெய்ட் திட்டம்:

Vi Rs 401 ப்ரீபெய்ட் திட்டத்தில் தினமும் 3 ஜிபி டேட்டா மற்றும், ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ்களை வழங்குகிறது. இதனுடன் கூடுதலாக 16 ஜிபி கூடுதல் டேட்டா மற்றும், டிஸ்னி + ஹாட்ஸ்டாருக்கு 1 ஆண்டு விஐபி சந்தாவையும் வழங்குகிறது. இரவு முழுவதும் அதிவேக இணையம் மற்றும் வார இறுதியில் பயன்படுத்தாத இணையம் ஆகியவற்றுடன் Vi திரைப்படங்கள் மற்றும் டிவி போன்ற கூடுதல் நன்மைகளையும் வழங்குகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!