கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி – உயர் நீதிமன்றம் முக்கிய உத்தரவு!

0
கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி - உயர் நீதிமன்றம் முக்கிய உத்தரவு!
கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி - உயர் நீதிமன்றம் முக்கிய உத்தரவு!
கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி – உயர் நீதிமன்றம் முக்கிய உத்தரவு!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு சங்கங்களில் அடகு வைத்த 5 சவரனுக்கு உட்பட்ட நகைக்கடன் தள்ளுபடி செய்யக் கோரிய வழக்கில் கூட்டுறவு வங்கி நிர்வாகம் இன்னும் இரண்டு வாரங்களில் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நகைக்கடன் தள்ளுபடி:

தமிழகத்தில் கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய 5 சவரன் அளவுள்ள நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று முதல்வர் கடந்த சட்டமன்ற தேர்தலில் வாக்குறுதி அளித்தார். அவர் ஆட்சிக்கு வந்தவுடன் நிபந்தனைகளின் அடிப்படையில் நகைக்கடன்களை தள்ளுபடி செய்ய முடிவு செய்யப்பட்டு நிபந்தனைகளும் வரையறை செய்யப்பட்டது. அந்த நிபந்தனைகளின் படி தகுதி பெற்றவர்களுக்கு மட்டுமே நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று அரசு அறிவித்தது. திரட்டப்பட்ட விவரங்களின் அடிப்படையில் நகைக்கடன் தள்ளுபடி பெற தகுதியானோர், தகுதியற்றோர் பட்டியல் வெளியிடப்பட்டது.

Daily Current Affairs in Tamil – 31st March 2022

அதில் நகைக்கடன் பெற்றதில் பாதிக்கும் மேற்பட்டோர் தகுதியற்றோர் பட்டியலில் இருப்பதாக புகார்கள் எழுந்தது. தேர்தலின் போது பொதுவாக கூறி விட்டு நிபந்தனைகள் விதிப்பது நியாயமில்லை என்று கூறினர். வாக்குறுதி அளித்தபடி அரசு கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் அளவில் நகைக்கடன் பெற்ற அனைவரது கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இந்த நிலையில் நகைக்கடன் பெற தகுதி பெற்றவர்களுக்கு தள்ளுபடி சான்றிதழ் வழங்கும் பணிகள் தொடங்கியது.

TNPSC குரூப் 4 VAO தேர்வுக்கு விண்ணப்பிக்க இருப்பவர்கள் கவனத்திற்கு – முழு விபரம் இதோ!

இதில் கோவையை சேர்ந்த ஒருவரின் நகைகள் 44 கிராம் எடை உடையது எனக்கூறி லுகையை வழங்க வங்கி அதிகாரிகள் மறுத்துவிட்டனர். தனது தங்க நகைக்கடனை தள்ளுபடி செய்யக்கோரி வங்கி அதிகாரிகளுக்கு கடன் பெற்றவர் கடந்த பிப்ரவரி மாதம் மனு அளித்துள்ளார். அப்போது நகைகள் மார்ச் 30 அன்று ஏலம் விடப்படும் என்று வங்கி நோட்டீஸ் அனுப்பியது. இது குறித்த வழக்கு விசாரணையில் கூட்டுறவு வங்கி நிர்வாகம் இன்னும் இரண்டு வாரங்களில் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!