சென்னை: தொடர்ந்து 2 நாட்களில் சவரனுக்கு ரூ.528 உயர்ந்த ஆபரணத் தங்கத்தின் விலை – நகைப்பிரியர்கள் அதிர்ச்சி!

0

சென்னை: தொடர்ந்து 2 நாட்களில் சவரனுக்கு ரூ.528 உயர்ந்த ஆபரணத் தங்கத்தின் விலை – நகைப்பிரியர்கள் அதிர்ச்சி!

தமிழகத்தின் தங்கம் விலை நேற்றும் உயர்வை சந்தித்தது. அதாவது தொடர்ந்து 2 நாட்களில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.528 உயர்ந்துள்ளது. இந்த தொடர் விலையேற்றம் ஏழை எளிய மக்கள் தங்க நகைகள் வாங்க முடியாத நிலைக்கு தள்ளப்படுவதற்கு காரணமாக அமைகிறது.

தங்கத்தின் விலை உயர்வு:

பொதுவாக தங்கம் ஒரு பாதுகாப்பான முதலீடாக இருந்து வருகிறது. இந்த விலைமதிப்பற்ற உலோகத்தின் விலை உயரும் போது, மற்ற பத்திரங்களின் மதிப்பு குறைகிறது. பங்குகளில் முதலீடு செய்யும் நம்பிக்கை இல்லாதபோது தங்க முதலீடுகள் நன்றாகச் செயல்படுகின்றன. இதற்கு வரலாற்று ரீதியாக சாட்சியும் உள்ளது. இதை அறிந்த மக்கள் தங்கத்தில் தாராளமாக முதலீடு செய்து வருகிறார்கள். தற்போது சரிந்து வரும் பங்குச் சந்தைகள் மற்றும் உள்நாட்டு நாணயத்தின் வீழ்ச்சிக்கு மத்தியில், முதலீட்டாளர்கள் தங்கள் பணத்தை முதலீடு செய்ய தங்கத்தின் பக்கம் திரும்பியுள்ளனர்.

2500 வீரர்களுடன் தமிழகத்தில் 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி, நாட்டின் பெருமை – அமைச்சர் பெருமிதம்!

தங்கத்திற்கான இறக்குமதி வரி விதிப்பை ஒன்றிய அரசு கடந்த 1ம் தேதி உயர்த்தியது. அன்றை தினம் முதல் தொடர்ந்து ஒரு வாரத்திற்கு தங்கம் விலை ஏறுமுகமாக இருந்தது. ஒரு வார காலத்தில் சவரன் ரூ.1000 வரை உயர்ந்தது. அதன் பிறகு தங்கம் விலை ஏற்ற தாழ்வாக இருந்து வருகிறது. மேலும் கடந்த 21ம் தேதி ஒரு கிராம் தங்கம் ரூ.4,630க்கும், சவரன் ரூ.37,040க்கும் விற்கப்பட்டது. 22ம் தேதி தங்கம் விலை உயர்வை சந்தித்தது. அதாவது கிராமுக்கு ரூ.50 உயர்ந்து ஒரு கிராம் ரூ.4,680க்கும், சவரனுக்கு ரூ.400 உயர்ந்து ஒரு சவரன் ரூ.37,440க்கும் விற்கப்பட்டது.

இந்நிலையில் நேற்றும் தங்கம் விலை உயர்வை சந்தித்தது. கிராமுக்கு ரூ.16 உயர்ந்து ஒரு கிராம் ரூ.4,696க்கும், சவரனுக்கு ரூ.128 உயர்ந்து ஒரு சவரன் ரூ.37,568க்கும் விற்கப்பட்டது. தொடர்ச்சியாக 2 நாட்களில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.528 உயர்ந்துள்ளது. மேலும் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருவது நகைப்பிரியர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் நேற்றைய விலையிலேயே இன்று தங்கம் விற்பனையாகும். மேலும் நாளை (திங்கட்கிழமை) மார்க்கெட் தொடங்கிய பின்னரே தங்கம் விலை மீண்டும் உயர்ந்து உள்ளதா? அல்லது குறைந்து உள்ளதா? என்பது தெரியவரும்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here