இந்தியாவில் மீண்டும் துவங்கும் ஜெட் ஏர்வேஸ் விமான சேவை – ஆட்சேர்ப்பு பணிகள் தீவிரம்!

0
இந்தியாவில் மீண்டும் துவங்கும் ஜெட் ஏர்வேஸ் விமான சேவை - ஆட்சேர்ப்பு பணிகள் தீவிரம்!
இந்தியாவில் மீண்டும் துவங்கும் ஜெட் ஏர்வேஸ் விமான சேவை - ஆட்சேர்ப்பு பணிகள் தீவிரம்!
இந்தியாவில் மீண்டும் துவங்கும் ஜெட் ஏர்வேஸ் விமான சேவை – ஆட்சேர்ப்பு பணிகள் தீவிரம்!

நிதி நெருக்கடியினால் பாதிக்கப்பட்ட ஜெட் ஏர்வேஸ் விமான நிறுவனம், தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ள தனது சேவையை மீண்டும் துவங்க இருப்பதாக அறிவித்துள்ளது. மேலும் தனது நிறுவனத்துக்கான புதிய பணியாளர்களை தேர்வு செய்யும் வேலைகளையும் துவக்கியுள்ளது.

விமான சேவை துவக்கம்

இந்தியாவில் செயல்பட்டு வரும் விமான போக்குவரத்து சேவையில் முக்கிய இடத்தை வகித்திருந்த ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் கடந்த சில வருடங்களாக நிதி நெருக்கடியை சந்தித்து வந்தது. அதே நேரத்தில் போதிய அளவு வங்கி கடன்களும் கிடைக்காததால் கடந்த 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 17 ஆம் தேதி முதல் தனது வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு விமான சேவைகளை முற்றிலுமாக நிறுத்துவதாக ஜெட் ஏர்வேஸ் அறிவித்திருந்தது. இதனுடன் கொரோனா பேரலை தொற்றும் விமான சேவைகளை முடக்கி விட இந்த பாதிப்பில் இருந்து மீண்டு வருவதற்கு சில காலதாமதம் ஆனது.

குஜராத்தின் புதிய முதல்வராக பூபேந்திர படேல் பதவியேற்பு – ஆளுநர் பதவிப் பிரமாணம்!

இருந்தாலும் கிட்டத்தட்ட 3 ஆண்டுகள் கழித்து தனது விமான சேவையை மீண்டும் துவங்க இருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. அந்த வகையில் வரும் 2022 ஆம் ஆண்டு முதல் உள்நாட்டு விமான சேவையை துவங்குவதற்கான அனுமதியை தேசிய கம்பெனி சட்ட தீர்ப்பாயத்திடம் இருந்து ஜெட் ஏர்வேஸ் விமான நிறுவனம் பெற்றிருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதனால் விமானத்தில் பணிபுரியும் ஊழியர்களை பணியில் அமர்த்தும் பணிகளை இந்நிறுவனம் தற்போது துவங்கியுள்ளது.

சபரிமலை கோவில் நடை திறக்கப்படும் நாட்கள் – தேவசம் போர்டு அறிவிப்பு!

அதற்காக இந்நிறுவனத்தில் ஏற்கனவே பணியாற்றியவர்களில் இருந்து 140 முதல் 150 பேரை மீண்டும் பணியில் சேர்க்க திட்டமிட்டுள்ளது. இதனுடன் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பணிக்கு இந்தியா உட்பட வெளிநாடுகளில் இருந்தும் ஆட்சேர்ப்பு நடத்தப்பட்டு வருகிறது. திட்டமிட்டபடி 2022 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் துவங்கும் ஜெட் ஏர்வேஸ் விமான சேவையில் முதல் கட்டமாக 1000 பணியாளர்களை ஈடுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!