விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியல் ஜெனிக்கு விரைவில் திருமணம் – அவரே சொன்ன விளக்கம்!

0
விஜய் டிவி
விஜய் டிவி "பாக்கியலட்சுமி" சீரியல் ஜெனிக்கு விரைவில் திருமணம் - அவரே சொன்ன விளக்கம்!
விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியல் ஜெனிக்கு விரைவில் திருமணம் – அவரே சொன்ன விளக்கம்!

விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில் ஜெனி கதாபாத்திரத்தில் நடித்து வரும் திவ்யா கணேஷ், விரைவில் திருமணம் செய்ய இருப்பதாகவும், மாப்பிள்ளை யார் என்பது பற்றி ரசிகர்களின் கேள்விக்கு பதில் அளித்து இருக்கிறார்.

பாக்கியலட்சுமி:

பாக்கியலட்சுமி சீரியல் இல்லத்தரசிகளின் கதையை மையமாக கொண்டு ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலில் பல முக்கிய கதாபாத்திரங்கள் கதையுடன் இணைந்து நடித்து வருகின்றனர். பாக்கியா, கோபி, இனியா, ராதிகா, எழில், செழியன், ஜெனி, ஈஸ்வரி, ராமமூர்த்தி ஆகிய கதாபாத்திரங்களை சுற்றியே கதை இருக்கிறது. இந்நிலையில் இந்த சீரியலில் ஜெனி கதாபாத்திரத்தில் நடிப்பவர் நடிகை திவ்யா கணேஷ். அவர் சீரியலில் பாக்கியாவின் மூத்த மருமகளாக நடிக்கிறார். பாக்கியாவின் முன்னேற்றத்திற்கு துணையாக இவர் இருப்பதால் ஏகப்பட்ட ரசிகர்கள் இவருக்கு இருக்கின்றனர்.

‘பிக் பாஸ்’ அல்டிமேட் நிகழ்ச்சியில் இருந்து திடீரென வெளியேறிய வனிதா – ரசிகர்கள் ஷாக்!

இவர் முன்னதாக சன் டிவி சுமங்கலி சீரியலில் நடித்து வந்தார். ஆனால் பாக்கியலட்சுமி சீரியல் தான் அவருக்கு எதிர்பார்த்த வரவேற்பை கொடுத்தது. இந்நிலையில் திவ்யா கணேஷ் ஆர்.கே சுரேஷ் என்ற பிரபல நடிகரை திருமணம் செய்ய இருப்பதாக அறிவித்து ஆனால் சில காரணங்களால் அவர் அந்த திருமணத்தை நிறுத்தினார். அதன் பின் படப்பிடிப்புகளில் மட்டுமே ஆர்வம் செலுத்தி வரும் அவர், வெள்ளித்திரையிலும் பல படங்களில் நடித்து வருகிறார்.

காதலுக்கு மரியாதை, அலைபாயுதே புகழ் மலையாள நடிகை லலிதா மரணம் – பிரபலங்கள் இரங்கல்!

இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் அவர் இனியா கதாபாத்திரத்தில் நடிக்கும் நேகா மேனன் உடன் இணைந்து பல புகைப்படங்களையும் வீடியோக்களையும் ஷேர் செய்வார். நேற்று ரசிகர்களின் கேள்விக்கு பதில் அளித்த அவர், திருமணம் எப்போது என ரசிகர்கள் கேட்ட கேள்விக்கு விரைவில் என பதில் அளித்து இருக்கிறார். மாபிள்ளை யார் என ரசிகர்கள் கேட்டதற்கு விரைவில் சொல்வேன் என சொல்லி இருக்கிறார். அதனால் ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். மேலும் சீரியல் சமந்தா என புகழ்ந்து பேசி இருக்கின்றனர்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!