அமேசான் CEO பதவியில் இருந்து விலகும் ஜெஃப் பெசோஸ் – புதிய அதிகாரி இன்று பதவியேற்பு!

0
அமேசான் CEO பதவியில் இருந்து விலகும் ஜெஃப் பெசோஸ் - புதிய அதிகாரி இன்று பதவியேற்பு!
அமேசான் CEO பதவியில் இருந்து விலகும் ஜெஃப் பெசோஸ் - புதிய அதிகாரி இன்று பதவியேற்பு!
அமேசான் CEO பதவியில் இருந்து விலகும் ஜெஃப் பெசோஸ் – புதிய அதிகாரி இன்று பதவியேற்பு!

உலகின் மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனமான அமேசானின் நிறுவனரும், தலைமை நிர்வாக அதிகாரியுமான ஜெஃப் பெசோஸ் இன்று (ஜூலை 5) முதல் தனது பதவியில் இருந்து விலகுகிறார். இதை தொடர்ந்து அமேசானின் புதிய நிர்வாக அதிகாரியாக (CEO) ஆண்டி ஜாஸி பதவியேற்க உள்ளார்.

புதிய CEO:

உலகின் முன்னணி வலைதள, தொழில்நுட்ப, வணிக நிறுவனமான அமேசான் பல சாதனைகளை செய்து, பொது மக்கள் மத்தியில் அசைக்க முடியாத ஒரு இடத்தை பெற்றுள்ளது. இந்த நிறுவனத்தில் தலைமை நிர்வாக அதிகாரியாக பொறுப்பில் இருக்கும் ஜெஃப் பெசோஸ் அமேசான் நிறுவனத்தின் வளர்ச்சிக்கு ஒரு முக்கிய பங்கு வகித்தவர். இந்த நிலையில் அமேசான் நிறுவனத்தின் CEO வாக இருந்த அவர் இன்று (ஜூலை 5) பதவியில் இருந்து விலக உள்ளார். அதாவது 57 வயதான பெசோஸ் அமேசானில் இனி வரும் காலத்தில் ஒரு நிர்வாகத் தலைவராக முக்கிய பங்கு வகிப்பார் என தெரிகிறது.

தமிழகத்தில் கூடுதல் சிறப்பு ரயில்கள் இயக்கம் – தெற்கு ரயில்வே அறிவிப்பு!

அதன் படி பெசோஸின் விண்வெளி நிறுவனமான ப்ளூ ஆரிஜின் உள்ளிட்ட பிற திட்டங்களில் அவர் ஈடுபடுவார் என கூறப்படுகிறது. உலகின் மிகப்பெரிய பணக்காரர் பட்டியலில் இடம் வகித்திருக்கும் பெசோஸ், 27 ஆண்டுகளுக்கு முன்னதாக முதன் முதலாக அமேசானை ஒரு ஆன்லைன் புத்தக கடையாக தொடங்கினார். கிடைக்கும் புத்தக ஆர்டர்களைத் தொகுத்து அவற்றை தபால் நிலையங்களுக்கு சென்று வழங்கிய வகையில் துவங்கிய அவரது பயணம் அவரை பின்னாட்களில் பல உயரத்திற்கு கொண்டு சென்றது.

சாதாரண புத்தக கடையாக ஆரம்பித்த அமேசான் நிறுவனம் ஈ-காமர்ஸ், செயற்கை நுண்ணறிவு, கிளவுட் கம்ப்யூட்டிங், டிஜிட்டல் ஸ்ட்ரீமிங் போன்ற துறைகளில் அதன் வணிகத்தை விரிவுபடுத்தியது. உலகத்தை கைக்குள் அடக்கிய அமேசான் நிறுவனத்தின் சந்தை மதிப்பு 1.7 டிரில்லியன் டாலருக்கும் அதிகமாகும். அமெரிக்காவின் சிறந்த பத்திரிகை நிறுவனமான, ஃபோர்ப்ஸ் கூற்றுப்படி, ஜெஃப் பெசோஸின் சொத்து மதிப்பு 1998 முதல் 6,196 பில்லியன் டாலர் வரை உயர்ந்து, அவருடைய பெயரை அமெரிக்க பணக்காரர்களின் பட்டியலில் பதிவு செய்தது.

TN Job “FB  Group” Join Now

தற்போது ஜெஃப் பெசோஸின் சொத்து மதிப்பில் 90% சதவீதம் அமேசான் நிறுவனத்திடமும், மற்றவை ப்ளூ ஆரிஜின் மற்றும் அமெரிக்க நாளேடான ‘வாஷிங்டன்’ உள்ளிட்ட அவரது மற்ற திட்டங்களில் உள்ளது. பெசோஸ் குறைந்த அளவு வருமான வரியை செலுத்துகிறார் எனவும், 2007 ஆம் ஆண்டில் பெசோஸ் ஒரு கோடீஸ்வரராக இருந்தபோது எந்தவொரு வரியையும் செலுத்தவில்லை என்று தரவுகள் தெரிவிக்கிறது. அப்போதுள்ள காலத்தில் அவரது நிகர மதிப்பு 18 பில்லியன் டாலராக இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இன்றுடன் பதவி விலகும் ஜெஃப் பெசோஸை தொடர்ந்து அமேசானின் புதிய நிர்வாக அதிகாரியாக ஆண்டி ஜாஸி பதவியேற்க உள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!