JEE 2021 முதல்நிலை தேர்வுக்கான நுழைவுச்சீட்டு – NTA வெளியீடு!

0
JEE 2021 முதல்நிலை தேர்வுக்கான நுழைவுச்சீட்டு - NTA வெளியீடு!
JEE 2021 முதல்நிலை தேர்வுக்கான நுழைவுச்சீட்டு - NTA வெளியீடு!
JEE 2021 முதல்நிலை தேர்வுக்கான நுழைவுச்சீட்டு – NTA வெளியீடு!

இளநிலை பொறியியல் படிப்புகளுக்கான JEE நுழைவுத் தேர்வின் முதல் நிலை 4 ஆம் கட்டதேர்வுகள் இம்மாதம் 26 ஆம் தேதி முதல் நடைபெற உள்ள நிலையில் அதற்கான அனுமதி சீட்டுகளை தேசிய தேர்வு முகமை (NTA) வெளியிட்டுள்ளது.

JEE நுழைவுத்தேர்வு:

IIT மற்றும் NIT உள்ளிட்ட மத்திய அரசின் உயர்கல்வி பொறியியல் கல்லூரிகளில் இளநிலை மற்றும் முதுநிலை பொறியியல் படிப்புகளுக்கு நுழைவுத்தேர்வு மூலம் மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் இளநிலை பொறியியல் படிப்புகளுக்கான JEE நுழைவுத் தேர்வுகள் முதல்நிலை மற்றும் மெயின் தேர்வுகள் என்ற இரு முறையில் நடத்தப்படுகிறது. இதில் ஒரு ஆண்டுக்கு 4 முறை நடத்தப்படும் முதல்நிலை நுழைவுத்தேர்வுகள் கடந்த பிப்ரவரி, மார்ச் மாதங்களில் இரண்டு கட்டமாக நடத்தப்பட்டது.

TN Job “FB  Group” Join Now

இதனிடையே கடந்த ஏப்ரல் மாதம் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்த 3 ஆம் கட்ட JEE முதல்நிலை தேர்வுகள் கொரோனா 2 ஆம் அலை காரணமாக நிறுத்தப்பட்டது. இத்தேர்வுகள் தொடர்ந்து ஜூலை மாதம் 20 முதல் 27 ஆம் தேதி வரை நடத்தப்பட்டு, ஆகஸ்ட் 6 ஆம் தேதி முடிவு வெளியிடப்பட்டது. இந்நிலையில் முதல்நிலை 4 ஆம் கட்ட தேர்வுகள் ஆகஸ்ட் 26, 27, 31, செப்டம்பர் 1, 2 உள்ளிட்ட தேதிகளில் கணினி வழியில் நடத்தப்பட இருக்கிறது.

இந்நிலையில் தேர்வுகளை எழுதும் மாணவர்களுக்கான நுழைவு சீட்டுகள் தற்போது வெளியாகியுள்ளது. இதனை jeemain.nta.nic.in என்ற இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளும்படி அறிவுத்தப்பட்டுள்ளது. மேலும் இது தொடர்பான மேலும் விவரங்களை 011-40759000 என்ற தொலைபேசி எண் அல்லது [email protected] என்ற மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் கூடுதல் விவரங்களுக்கு www.nta.ac.in என்ற இணையதளத்தை பார்வையிடவும்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!