JEE இரண்டாம் கட்ட நுழைவுத் தேர்வு தேதி மாற்றம் – NTA முக்கிய அறிவிப்பு!

0
JEE இரண்டாம் கட்ட நுழைவுத் தேர்வு தேதி மாற்றம் - NTA முக்கிய அறிவிப்பு!
JEE இரண்டாம் கட்ட நுழைவுத் தேர்வு தேதி மாற்றம் - NTA முக்கிய அறிவிப்பு!JEE இரண்டாம் கட்ட நுழைவுத் தேர்வு தேதி மாற்றம் - NTA முக்கிய அறிவிப்பு!
JEE இரண்டாம் கட்ட நுழைவுத் தேர்வு தேதி மாற்றம் – NTA முக்கிய அறிவிப்பு!

நாடு முழுவதும் உள்ள தொழில்நுட்ப கல்லூரிகளில் சேர்ந்து படிப்பதற்கான ஜே.இ.இ மெயின் நுழைவு தேர்வு ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படுகிறது. அந்த வகையில் இந்த ஆண்டிற்கான ஜே.இ.இ முதல் கட்ட நுழைவுத் தேர்வு கடந்த ஜூன் மாதம் நடத்தப்பட்டது. இந்நிலையில் இரண்டாம் கட்ட நுழைவுத் தேர்வு குறித்து வெளியான தேதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது

JEE நுழைவுத் தேர்வு

தேசிய தேர்வு முகமை சார்பில் நாடு முழுவதும் உள்ள ஐ.ஐ.டி., உள்ளிட்ட கல்வி நிறுவனங்களில் பொறியியல் படிப்பில் மாணவர் சேர்க்கைக்கான JEE நுழைவுத் தேர்வு ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. அந்த வகையில் இந்த ஆண்டிற்கான ஜே.இ.இ.,முதல் கட்ட நுழைவுத் தேர்வு கடந்த ஜூன் மாதம் 23 முதல் 29 ஆம் தேதிகளில் நடந்து முடிந்துள்ளது. அதன் முடிவுகள் ஜூலை 12 ஆம் தேதி வெளியானது. அதன் பின் JEE இரண்டாம் கட்ட நுழைவுத் தேர்வானது ஜூலை 21 முதல் 30 வரை நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது.

Exams Daily Mobile App Download

இந்நிலையில் இந்த தேர்வு தேதியில் தற்போது மாற்றம் செய்யப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் படி இந்த தேர்வு வரும் 25ம் தேதி தொடங்கும் என புதிய அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. மேலும், இந்த இரண்டாம் கட்ட தேர்வில் 6.29 லட்சம் பேர் கலந்து கொள்ள இருக்கின்றனர். இந்த தேர்வானது வெளிநாடுகளில் உள்ள 17 இடங்கள் உட்பட 500 நகரங்களில் உள்ள பல்வேறு மையங்களில் நடைபெறுகிறது.

இந்தியாவில் ஒரே நாளில் 21,566 பேருக்கு கொரோனா – ஒன்றிய சுகாதாரத்துறை அறிக்கை!

இந்நிலையில், இந்த இரண்டாம் கட்ட தேர்வுக்கான ஹால்டிக்கெட் இன்று வெளியிடப்பட்டுள்ளது. மேலும், தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள மாணவ- மாணவிகள் தங்களுடைய விண்ணப்ப எண், பிறந்த தேதி அல்லது கடவுச்சொல் கொடுத்து ஹால்டிக்கெட் பதிவிறக்கம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, இந்த தேர்வானது இந்திய அரசு கல்வி அமைச்சகத்தின் தேசிய தேர்வு முகமை சார்பாக ஆண்டிற்கு இரண்டு முறை நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here