2021 ஜேஇஇ மற்றும் முதுநிலை நீட் தேர்வுகள் – தேர்வு அட்டவணை குறித்த விவரங்கள்!!
நடப்பு ஆண்டின் தள்ளிவைக்கப்பட்ட ஜேஇஇ தேர்வுகள் மட்டும் முதுநிலை நீட் தேர்வுகள் குறித்த புதிய அறிவிப்புகளை இந்த பதிவில் காணலாம்.
நுழைவுத்தேர்வுகள்:
நாடு முழுவதும் கொரோனா தொற்றின் பரவல் காரணமாக நடப்பு ஆண்டின் ஜேஇஇ தேர்வுகள் தள்ளிவைக்கப்பட்டிருந்தது. மாணவர்களின் கோரிக்கைகளுக்கு இணங்க நடப்பு ஆண்டு முதல் ஜேஇஇ தேர்வுகள் நான்கு கட்டங்களாக பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மற்றும் மே ஆகிய நான்கு மாதங்களில் நடத்துவதற்கு அரசு திட்டமிட்டுள்ளது. முன்னதாக பிப்ரவரி மற்றும் மார்ச் மாத ஜேஇஇ நுழைவு தேர்வுகள் திட்டமிட்டபடி நடந்து முடிந்து விட்டது.
ஆதார் கார்டில் புகைப்படத்தை மாற்றும் புதிய வழிமுறைகள் இதோ!!
கொரோனா இரண்டாம் அலையின் காரணமாக நாட்டின் பல முக்கிய நுழைவுத்தேர்வுகள் தள்ளிவைக்கப்பட்டிருந்தது. தற்போது தொற்றின் நிலைமையை கல்வி அமைச்சகம் மறுபரிசீலனை செய்ய உள்ளது. கல்லூரிகளில் புதிய அமர்விற்கான நீட் மற்றும் ஜேஇஇ தேர்வுகளை நடத்துவதற்கு கல்வி அமைச்சகம் பணிகளை மேற்கொண்டு வருகிறது. ஜே.இ.இ மெயின் (ஏப்ரல் மற்றும் மே) மற்றும் மருத்துவ நுழைவுத் தேர்வு நீட் ஆகியவற்றை ஆகஸ்ட் மாதம் நடத்துவது குறித்த முடிவுகளை மத்திய கல்வி அமைச்சகம் வெளியிடும்.
TN Job “FB
Group” Join Now
மேலும், ஜே.இ.இ மெயின் மற்றும் ஆகஸ்ட் 1ம் தேதி நீட் முதுநிலை தேர்வை நடத்துவது பற்றி மறு ஆய்வுக் கூட்டம் நடத்தப்படும் என்று அதிகாரபூர்வ தகவல் வந்துள்ளது. ஜே.இ.இ தேர்வு ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதத்தில் நடத்தப்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளது. என்.டி.ஏ நிறுவனம் தேர்வுக்கு குறைந்தது 15 நாட்களுக்கு முன்னதாக அறிவிப்பை தெரிவிக்கும். தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவர்கள் JEE Main 2021 தேர்வு பற்றிய தகவல்களை அதிகாரப்பூர்வ வலைத்தளங்களான jeemain.nta.nic.in மற்றும் nta.ac.in ல் தெரிந்து கொள்ளலாம்.
மருத்துவ படிப்பிற்கு தமிழகத்தில் மாநில அளவிலான தேர்வு முறை பின்பற்றலாம்…கலை அறிவியல் கல்லூரிகளில் நுழைவுத்தேர்வு முறை இருக்கும் போது மருத்துவத்திற்கு இல்லாவிட்டால் சரியாக இருக்காது…ப.வெரும் பண்ணிரெண்டாம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை சிறப்பாகாது.. நாட்டிற்கு ஒரு சிறந்த மருத்துவரை அரசு தரவேண்டும் என்றால் “மாநில நுழைவுத்தேர்வு” அவசியம்…. மேலும் இந்த ஆண்டு நீட் தேர்வை ரத்து செய்வது சிறந்தல்ல… ஏனெனில் கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து விக்கிரமாதித்தன் போல என்றாவது ஒரு நாள் வெற்றி பெறுவோம் என்று நீட் தேர்வுக்கு படித்துக்கொண்டிருக்கும் மாணவர்களுக்கு மிகுந்த மன அழுத்தத்தை கொடுக்கும்….இந்த முறையாவது தேர்ச்சி பெற்றுவிட வேண்டும் என்று அதிக சிரத்தை எடுத்து படித்த பிள்ளைகளுக்கு அதிக அழுத்தம் ஏற்படும்…. குறைந்த பட்சம் மாநில நுழைவுத்தேர்வாவது நடத்துவது சிறப்பு…..தயவு செய்து இதை மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் கவனத்திற்கு கொண்டு செல்லுங்கள்…
சௌ.விமலா
தென்காசி.
.
அரசு தகுதியின் அடிப்படையில் தரமானவற்றை வழங்க வேண்டும். நாடு விடுதலை ஆகி 75.வருடங்கள்ஆகிறது. இன்றும் இட ஒதிக்கீடு என்ற இடத்திலேயே தொங்கிக்கொண்டு இருந்தால் கீழே விழும் நிலை தான் இருக்கும் எனவே எதை எப்படி செய்ய வேண்டுமோ அதன் நிலை அறிந்து செயல் பட வேண்டும். தகுதி ஒன்றே உயர்த்தும். எனவே தகுதித் தேர்வின் அடிப்படையில வழங்குவதே சிறந்தது
.