ஜூலை 20 முதல் ஆகஸ்ட் 2 வரை JEE Mains நுழைவுத்தேர்வு – ஜூலை 6 முதல் விண்ணப்பம்!

0
ஜூலை 20 முதல் ஆகஸ்ட் 2 வரை JEE Mains நுழைவுத்தேர்வு - ஜூலை 6 முதல் விண்ணப்பம்!
ஜூலை 20 முதல் ஆகஸ்ட் 2 வரை JEE Mains நுழைவுத்தேர்வு - ஜூலை 6 முதல் விண்ணப்பம்!
ஜூலை 20 முதல் ஆகஸ்ட் 2 வரை JEE Mains நுழைவுத்தேர்வு – ஜூலை 6 முதல் விண்ணப்பம்!

இந்தியாவில் கொரோனா 2 ஆம் அலை பரவல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ள JEE Main நுழைவுத் தேர்வு நடைபெறும் தேதிகள் குறித்த அறிவிப்புகளை மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் வெளியிட்டுள்ளார். அதற்கான விண்ணப்ப செயல்முறை குறித்து காண்போம்.

JEE நுழைவுத்தேர்வுகள்:

தேசிய தேர்வு முகமை (NTA) நடத்தும் பொறியியல் படிப்புகளுக்கான JEE நுழைவுத்தேர்வு மற்றும் மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத்தேர்வு கொரோனா 2 ஆம் அலை காரணமாக ஒத்தி வைக்கப்பட்டது. இதற்கிடையில் JEE Main மற்றும் நீட் நுழைவுத்தேர்வுகள் ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதத்தில் நடைபெறும் என சமூக வலைதளங்களில் பல்வேறு விதமான கருத்துக்கள் எழுந்து வந்த நிலையில், மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

ஜியோவின் அசத்தலான 2 புதிய ப்ரீபெய்ட் திட்டங்கள் – முழு விவரம் இதோ!!

அந்த வகையில் இந்த ஆண்டுக்கான JEE மெயின் தேர்வுகளின் முதல் அமர்வு ஜூலை 20 முதல் 25 வரையும், 2வது அமர்வு ஜூலை 27 முதல் ஆகஸ்ட் 2 வரை நடைபெற உள்ளது. முன்னதாக பொறியியல் நுழைவுத் தேர்வான JEE மெயின், ஏப்ரல் மாதம் மற்றும் மே மாதம் நடத்த திட்டமிடப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதை தொடர்ந்து தேர்வு நடைபெறும் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மாணவர்களுக்கான நுழைவு அட்டை மற்றும் இறுதி முடிவு வெளியாகும் தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்புக்கு பின்னாக தேசிய தேர்வு முகமை (NTA) அதன் அதிகாரப்பூர்வ வலைதளமான nta.ac.in மற்றும் jeemain.nta.nic.in ல் JEE மெயின் தேர்வுக்கான விண்ணப்பங்களை திறந்துள்ளது.

TN Job “FB  Group” Join Now

அந்த வகையில் தேர்வு மையங்களை மாற்ற விரும்பும் மாணவர்கள் அல்லது JEE மெயின் நுழைவுத் தேர்வுக்கு பதிவு செய்ய விரும்புபவர்கள் ஜூலை 6 முதல் 8 ஆம் தேதி வரை அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம். தவிர ஆன்லைன் விண்ணப்பத்தை சமர்ப்பிக்க ஜூலை 8, கடைசி தேதி என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் JEE மெயின் நுழைவுத் தேர்வுகளை மே முதல் ஆகஸ்ட் மாதத்தில் எழுதுவதற்கு ஆர்வமுள்ள மாணவர்கள் ஜூலை 9 முதல் 12 வரை விண்ணப்ப படிவங்களை சமர்ப்பிக்கலாம்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here