JEE Main 2023 : Session 2 தேர்வர்கள் கவனத்திற்கு – நாளை முதல் விண்ணப்ப பதிவு தொடக்கம்!

0
JEE Main 2023 : Session 2 தேர்வர்கள் கவனத்திற்கு - நாளை முதல் விண்ணப்ப பதிவு தொடக்கம்!
JEE Main 2023 : Session 2 தேர்வர்கள் கவனத்திற்கு - நாளை முதல் விண்ணப்ப பதிவு தொடக்கம்!
JEE Main 2023 : Session 2 தேர்வர்கள் கவனத்திற்கு – நாளை முதல் விண்ணப்ப பதிவு தொடக்கம்!

நாட்டில் IIT, NIT, IISc உள்ளிட்ட உயர் கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கையானது JEE நுழைவு தேர்வு நடத்தப்படுகிறது. இந்த தேர்வு ஆண்டுக்கு இருமுறை நடத்தப்படுகிறது. அந்த வகையில், முதல் அமர்வுக்கான தேர்வு முடிவடைந்த நிலையில், 2ம் அமர்வுக்கான விண்ணப்ப பதிவு நாளை முதல் தொடங்குகிறது.

JEE தேர்வு;

இந்தியாவில் IIT, NIT, IISc ஆகிய உயர்கல்வி நிறுவனங்களில் இளங்கலை பொறியியல் (B.Tech/ B.Arch/ B.Planning) படிப்புகளில் மாணவர்கள் சேரக்கையானது JEE முதன்மை தேர்வு வாயிலாக நடத்தப்படுகிறது. இந்த தேர்வு ஆண்டுக்கு இருமுறை நடத்தப்படுகிறது. அதாவது ஜனவரி மற்றும் ஏப்ரல் மாதத்தில் நடத்தப்படுகிறது. இத்தேர்வு எழுத 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும்.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

தேசிய தேர்வு முகமையால் (NTA) JEE முதன்மை தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. அத்துடன் நடப்பு ஆண்டுக்கான தேர்வை 2021, 2022ம் ஆண்டில் 12ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் எழுதலாம். அந்த வகையில், இத்தேர்வின் முதல் அமர்வு ஜனவரி 24,25,27,28,29,30,31 ஆகிய தேதிகளில் நடைபெற்று முடிவடைந்துள்ளது. இந்த நிலையில், இத்தேர்வின் 2ம் அமர்வு வருகிற ஏப்ரல் 06, 07, 08, 09, 10, 11, 12 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.

TNDTE Diploma Oct தேர்வு முடிவுகள் 2022 – வெளியீடு!

இந்த தேர்வுக்கு நாளை முதல் மார்ச் 07ம் தேதி அன்று இரவு 9 மணி வரை விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இத்தேர்வை எழுத விரும்பும் மாணவர்கள் https://nta.ac.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று விண்ணப்பிக்கலாம். அதன்பின்பு இத்தேர்விற்கான Admit Card மார்ச் மாதத்தின் கடைசி வாரத்தில் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!