JEE மெயின் நுழைவுத் தேர்வு குறித்த முக்கிய அறிவிப்பு – தேர்வர்கள் கவனத்திற்கு!

0
JEE மெயின் நுழைவுத் தேர்வு குறித்த முக்கிய அறிவிப்பு - தேர்வர்கள் கவனத்திற்கு!
JEE மெயின் நுழைவுத் தேர்வு குறித்த முக்கிய அறிவிப்பு - தேர்வர்கள் கவனத்திற்கு!
JEE மெயின் நுழைவுத் தேர்வு குறித்த முக்கிய அறிவிப்பு – தேர்வர்கள் கவனத்திற்கு!

நாடு முழுவதும் உள்ள ஐ.ஐ.டி., உள்ளிட்ட கல்வி நிறுவனங்களில் பொறியியல் படிப்பில் மாணவர் சேர்க்கைக்கான JEE நுழைவுத் தேர்வு ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. இந்நிலையில் 2023 ஆம் ஆண்டுக்கான ஜே.இ.இ. மெயின் தேர்வு முதல் அமர்வுத் தேர்வுகள் இன்று துவங்கியது.

JEE நுழைவுத் தேர்வு:

தேசிய தேர்வு முகமை (NTA) சார்பில் நாடு முழுவதும் உள்ள மத்திய கல்வி நிறுவனங்களில் பொறியியல் படிப்பில் மாணவர் சேர்க்கைக்கு JEE நுழைவுத் தேர்வு ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. இந்த தேர்வானது ஆண்டுதோறும் இரு முறை நடத்தப்படுகிறது. இந்நிலையில் 2023ஆம் ஆண்டுக்கான ஜே.இ.இ. மெயின் தேர்வு முதல் அமர்வுத் தேர்வுகள் இன்று (ஜன 24) முதல் தொடங்கி இருக்கிறது .

B.E முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்புகள் | B.E Job Vacancies!

Follow our Instagram for more Latest Updates

மேலும் இந்த தேர்வுக்கு விண்ணப்பித்த சில தேர்வர்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட விண்ணப்ப படிவங்களை பூர்த்தி செய்து சமர்ப்பித்து உள்ளனர். அத்தகைய விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும் அவர்களின் விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டு வருவதாகவும், தேர்வர்களின் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு மின்னஞ்சல் பெறப்பட்டவர்கள் இது குறித்த விளக்கத்தை கொடுக்கப்பட்ட வழிமுறைகளை பின்பற்றி சமர்ப்பிக்க வேண்டும்.

அத்தகைய விண்ணப்பதாரர்களுக்கு தேர்வு இன்றும் (ஜன.24) மற்றும் நாளையும் (ஜன.25) நடைபெறாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கான தேர்வு தேதி குறித்து தேசிய தேர்வு முகமையின் அதிகாரபூர்வ இணையதளமான jeemain.nta.nic.in என்பதில் பின்னர் அறிவிக்கப்படும். மேலும் இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு 011-4075900 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

Press Notice PDF
Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!