ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வு தேதி ஜனவரி 7 இல் அறிவிப்பு – மத்திய கல்வித்துறை அமைச்சர்!!

0
ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வு தேதி ஜனவரி 7 இல் அறிவிப்பு - மத்திய கல்வித்துறை அமைச்சர்!!
ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வு தேதி ஜனவரி 7 இல் அறிவிப்பு - மத்திய கல்வித்துறை அமைச்சர்!!
ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வு தேதி ஜனவரி 7 இல் அறிவிப்பு – மத்திய கல்வித்துறை அமைச்சர்!!

நாடு முழுவதும் ஜேஇஇ மெயின் தேர்வுகள் 4 கட்டங்களாக வரும் பிப்ரவரி மாதம் முதல் நடைபெற உள்ள நிலையில், ஜேஇஇ அட்வான்ஸ்டு 2021 தேர்வு தேதி வரும் ஜனவரி 7ம் தேதி மாலை 6 மணிக்கு வெளியிடப்படும் என மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அறிவித்து உள்ளார்.

ஜேஇஇ தேர்வு:

இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களான ஐஐடி-யில் சேர்ந்து படிக்க ஜேஇஇ தேர்வில் தேர்ச்சி பெற வேண்டியது கட்டாயமாக உள்ளது. இதற்கிடையில் ஜேஇஇ மெயின் தேர்வுகளில் பல்வேறு புதிய நடைமுறைகள் நடப்பு கல்வியாண்டு முதல் அமல்படுத்தப்பட்டு உள்ளன. அதன்படி தமிழ் உட்பட 13 மொழிகளில் தேர்வுகள் நடைபெற உள்ளன. ஜேஇஇ மெயின் தேர்வுகள் ஆண்டுக்கு 4 முறை நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது.

9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று முதல் பள்ளிகள் திறப்பு!!

அதன்படி பிப்ரவரி 23, மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் தேர்வுகள் நடைபெறவுள்ளது. ஒரு மாணவர் 4 தேர்வுகளிலும் பங்கேற்கலாம். எனினும் அவர் பெற்றுள்ள அதிகபட்ச மதிப்பெண்களே கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். இதற்கிடையில் ஜேஇஇ அட்வான்ஸ்டு 2021 தேர்வுக்கான அறிவிப்பை மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு உள்ளார்.

CBI இன்ஸ்பெக்டர் வேலைவாய்ப்பு 2021

அவரது பதிவில், ஜேஇஇ அட்வான்ஸ்டு 2021 தேர்வுக்கான தகுதி மற்றும் தேர்வு தேதி வரும் ஜனவரி 7ம் தேதி மாலை 6 மணிக்கு வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஜேஇஇ மெயின் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்கள், அட்வான்ஸ்டு தேர்வெழுத தகுதி பெறுவார்கள் எனவும் கூறப்படுகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!