ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே மரணம் – அதிர்ச்சியில் உலக நாடுகள்!

0
ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே மரணம் - அதிர்ச்சியில் உலக நாடுகள்!
ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே மரணம் - அதிர்ச்சியில் உலக நாடுகள்!
ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே மரணம் – அதிர்ச்சியில் உலக நாடுகள்!

ஜப்பானில் இன்று (ஜூலை 8) காலை மர்ம நபரால் நடுரோட்டில் வைத்து சுடப்பட்ட முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே தற்போது மரணடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இவரது தொழில் வாழ்க்கை குறித்த சில தகவல்களை இப்பதிவில் காணலாம்.

பிரதமர் மரணம்

ஜப்பான் நாட்டின் நாரா நகரில் நடைபெற்ற ஒரு பிரச்சார நிகழ்வின் போது மர்ம நபரால் துப்பாக்கியால் சுடப்பட்ட முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே (60) மரணமடைந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இப்போது இந்த கொலைக்கு காரணமாக 40 வயது மதிக்கத்தக்க ஒரு நபரை போலீசார் சந்தேகத்திற்கிடமாக கைது செய்துள்ளனர். முன்னதாக, ஜப்பான் நாட்டின் நாடாளுமன்ற மேலவை தேர்தல் தொடர்பான பரப்புரையில் ஈடுபட்டிருந்த முன்னாள் பிரதம ஷின்சோ அபேவை மர்ம நபர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டதால் அவர் நாரா பல்கலைக்கழக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

Exams Daily Mobile App Download

அங்கு நடைபெற்ற முதற்கட்ட சிகிச்சையில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளதாகவும், அவர் சுயநினைவை இழந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியானது. தொடர்ந்து இன்று காலை முதல் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே தற்போது மரணமடைந்துள்ளார். ஜப்பானில் ஒரு முக்கிய அரசியல் குடும்பத்தில் பிறந்த ஷின்சோ அபே, அந்நாட்டின் நீண்ட காலம் பிரதமராக இருந்தவர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

அனைத்து பள்ளி & கல்லூரிகளுக்கு அடுத்த 2 நாட்கள் விடுமுறை அறிவிப்பு – அரசு அதிரடி!

கடந்த செப்டம்பர் 21, 1954ல் ஜப்பானின் வெளியுறவு அமைச்சராகப் பணியாற்றிய ஷின்டாரோ அபேயின் மகனாக பிறந்த ஷின்சோ, டோக்கியோவில் உள்ள சீகேய் பல்கலைக்கழகம் மற்றும் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றுள்ளார். முதலில் சட்டமன்ற உறுப்பினராக துவங்கிய இவரது அரசியல் வாழ்க்கை பிறகு தலைமை அமைச்சரவை செயலாளராகவும், பிரதமராகவும் தொடர்ந்தது. தவிர, ஷின்சோ இதுவரை மொத்தம் நான்கு முறை பிரதம மந்திரியாக பதவி வகித்திருந்தார். மேலும், அவ்வப்போது உடல்நலக்குறைவு காரணமாக தனது பதவியையும் ராஜினாமா செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!