பாரதியை மனைவியுடன் சேர்த்து வைக்க நினைக்கும் ஜானகி அம்மா – இன்றைய எபிசோட்!

0
பாரதியை மனைவியுடன் சேர்த்து வைக்க நினைக்கும் ஜானகி அம்மா - இன்றைய எபிசோட்!
பாரதியை மனைவியுடன் சேர்த்து வைக்க நினைக்கும் ஜானகி அம்மா - இன்றைய எபிசோட்!
பாரதியை மனைவியுடன் சேர்த்து வைக்க நினைக்கும் ஜானகி அம்மா – இன்றைய எபிசோட்!

விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில் லட்சுமி கண்ணம்மாவிடம் ஹேமாவிற்கு உங்கள் பெயர் கண்ணம்மா என இப்போது தான் தெரிந்து இருக்கிறது என உண்மையை சொல்கிறார். மறுபக்கம் ஜானகி அம்மா சௌந்தர்யாவிடம் பாரதியை மனைவியுடன் சேர்த்து வைக்கிறேன் என சொல்கிறார்.

பாரதி கண்ணம்மா:

இன்று “பாரதி கண்ணம்மா” சீரியலில் கண்ணம்மா கடைக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு வர அப்போது லட்சுமி ஹோம்ஒர்க் செய்து கொண்டிருக்கிறார். என்ன லட்சுமி எழுதுகிறாயா என கண்ணம்மா கேட்க ஆமாம் என லட்சுமி சொல்கிறார். பின் உன்னை இன்னைக்கு லாரி மோத வந்துச்சா என கேட்க, கண்ணம்மா உனக்கு எப்படி இதெல்லாம் தெரியும் என கேட்கிறார். அப்போது லட்சுமி ஹேமா தான் போன் செய்து சொன்னா என சொல்ல உடனே கண்ணம்மா ஆமாம் உன்னிடம் அப்பறம் சொல்லலாம் என நினைத்தேன் என சொல்கிறார். அப்போது லட்சுமி ஹேமாவிற்கு உன் பெயர் கண்ணம்மா என தெரியாதா என கேட்கிறார்.

Exams Daily Mobile App Download

ஹேமா என்னிடம் போன் செய்து கேட்கிறாள் என சொல்ல, கண்ணம்மா அதை கேட்டு அதிர்ச்சி அடைகிறார். பின் சௌந்தர்யாவிடம் போன் செய்து ஹேமா முன்னாடி இன்னைக்கு நீங்க என்னை கண்ணம்மா என கூப்பிட்டீங்களா என கேட்கிறார். சௌந்தர்யா ஆமாம் என சொல்ல, ஹேமாவிற்கு என் பெயர் கண்ணம்மா என தெரிந்துவிட்டது என சொல்கிறார். இது என்ன புது பிரச்சனை என நினைக்கிறார். பின் பாரதிக்கு இந்த விஷயம் தெரிந்தால் நான் தான் சொன்னேன் என கோவப்படுவான். நீ தான் ஹேமாவின் அம்மா என உண்மை தெரிந்தால் ஹேமாவை ஒதுக்கி வைத்து தனியாக இருக்க தொடங்கி விடுவான் என சொல்லி வருத்தப்படுகிறார்.

மறுபக்கம் ரோஹித் கண்ணம்மாவை இடிக்க வந்த லாரி பற்றி விசாரணை செய்து கொண்டிருக்கிறார். அப்போது வெண்பா வந்து பார்க்க என்ன பேசிக் கொண்டிருக்கிறாய் என கேட்கிறார். ரோஹித் என் பாசமான அக்காவை இடிக்க பார்த்தது யார் என்ற உண்மையை கண்டுபிடிப்பேன் என சொல்ல வெண்பா சொந்த வீட்டில் இருந்தே எனக்கு ஆப்பு வைக்கிறான் என நினைக்கிறார். மறுபக்கம் பாரதி மருத்துவமனைக்கு வர அங்கே பாடல் சத்தம் கேட்கிறது.

அதை பார்த்து பாரதி நர்ஸை அழைத்து எதாவது நிகழ்ச்சி அருகே நடக்கிறதா என கேட்கிறார். அப்போது ஜானகி அம்மாவை பார்க்க அவர்களின் சொந்தங்கள் வந்திருக்கிறார்கள் என்பதால் நிகழ்ச்சி நடக்கிறது என சொல்கிறார். கண்ணம்மா தான் இந்த நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்கி இருப்பார் என பாரதி கோவப்பட கண்ணம்மாவை அழைத்து யாரு இதெற்கெல்லாம் அனுமதி கொடுத்தா என கேட்கிறார். உடனே கண்ணம்மா விக்ரம் சார் தான் அனுமதி கொடுத்ததாக சொல்கிறார்.

ஜானகி அம்மா ராமன் ஐயா அவர்களின் பூர்வீக வீட்டிற்கு செல்வதாக சொல்ல, கண்ணம்மாவை உடன் வர சொல்கிறார். அது மட்டுமில்லாமல் லட்சுமி மற்றும் ஹேமாவை வர சொல்ல பாரதியிடம் அனுமதி வாங்குகிறார். பின் சௌந்தர்யா ஜானகி அம்மாவிடம் இப்படி எல்லாம் நடனம் ஆட கூடாது என சொல்ல நான் இருக்க போகும் கொஞ்ச நாளில் சந்தோசமாக இருக்க வேண்டும் என சொல்கிறார். பின் ஜானகி அம்மா பாரதியின் குடும்ப வாழ்க்கை பற்றி சௌந்தர்யாவிடம் பேசுகிறார்.

பாண்டியன் உடன் கடை வேலைகளை கவனிக்கும் தனம், புது வேலையில் கஷ்டப்படும் கதிர் – இன்றைய எபிசோட்!

என் குடும்பத்தை பார்க்க பாரதியை வர சொன்னேன் என் மனைவி உடன் இல்லை என பாரதி சொல்கிறார். பதிலுக்கு கண்ணம்மா கூட என் கணவருடன் வாழவில்லை என சொல்கிறார். அவர்கள் இருவரை தான் எனக்கு மிகவும் பிடிக்கும் ஆனால் அவர்கள் வாழ்க்கை இப்படி இருக்கிறது என நினைத்து ஜானகி அம்மா வருத்தப்படுகிறார். பின் ராமன் சார் இந்த காலத்தில் விவாகரத்து எல்லாம் சாதாரணமாகிவிட்டது என சொல்ல, ஜானகி அம்மா அப்படி எல்லாம் இல்லை பாரதி மீது தவறு இருக்காது, உன் மருமகளை வர சொல் நான் பேசுகிறேன் என சொல்கிறார். அதை கேட்டு சௌந்தர்யா மற்றும் வேணு இருவரும் அதிர்ச்சி அடைகின்றனர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here