தமிழகத்தில் ஜன.28 தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

0
தமிழகத்தில் ஜன.28 தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!
தமிழகத்தில் ஜன.28 தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!
தமிழகத்தில் ஜன.28 தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்தில் ஜன.28ஆம் தேதி தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. தற்போது வேலை வாய்ப்பை தேடி வரும் நபர்கள் இந்த முகாமில் கலந்து கொண்டு பயனடையுமாறு அம்மாவட்ட ஆட்சியர் கேட்டுக் கொண்டுள்ளார்.

வேலைவாய்ப்பு முகாம்:

தமிழகத்தில் கடந்த ஆண்டு முதல் அனைத்து மாவட்டங்களிலும் அதிக அளவில் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் அண்மையில் கல்லூரி படிப்பை முடித்த பிரஷ்ஷர்கள் மற்றும் வெகு நாட்களாக வேலை தேடி வந்தவர்கள் என ஏராளமானோர் பல முன்னணி நிறுவனங்களில் வேலை வாய்ப்பு பெற்று பயனடைந்துள்ளனர்.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

மற்ற மாவட்டங்களை தொடர்ந்து ஜன. 28 (சனிக்கிழமை) கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் வட்டத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இது குறித்து அம்மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்திக் குறிப்பில் இந்த வேலைவாய்ப்பு முகமானது மாநில அரசின் ஊரக வாழ்வாதார இயக்கம் மூலம் நடைபெற உள்ளது.

Instagram பயனர்களுக்கான புதிய அப்டேட் – ஒரே சமயத்தில் இனி 2 Profile போட்டோ!!

இந்த முகாம் வரும் சனிக்கிழமையன்று சங்கராபுரம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறும். இதில் 18 வயது முதல் 35 வயதுக்கு உட்பட்ட வேலை நாடுநர்கள் பங்கேற்கலாம். மேலும் இதில் கலந்து கொள்ள வருபவர்கள் தங்களது ஆதார் அட்டை மற்றும் கல்வித் தகுதி சான்றிதழ்கள் போன்ற சுயவிவர ஆவணங்களை உடன் எடுத்து வர வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!