அதிரடியாக  கிராமிற்கு ரூ.21 உயர்ந்த ஆபரணத் தங்கத்தின் விலை – பொங்கல் பண்டிகை எதிரொலி!

0
அதிரடியாக  கிராமிற்கு ரூ.21 உயர்ந்த ஆபரணத் தங்கத்தின் விலை - பொங்கல் பண்டிகை எதிரொலி!
அதிரடியாக  கிராமிற்கு ரூ.21 உயர்ந்த ஆபரணத் தங்கத்தின் விலை - பொங்கல் பண்டிகை எதிரொலி!
பொங்கல் பண்டிகையை  முன்னிட்டு ஆபரணத் தங்கத்தின் விலை அதிரடியாக கிராமிற்கு ரூபாய் 21 உயர்ந்துள்ளது. இதனால் நகைப்பிரியர்கள்  மிகுந்த அதிர்ச்சியில் உள்ளனர்.
தங்கத்தின் விலை:

நாட்டில் ஏழை எளியவர்கள் முதல் வசதியானவர்கள் வரை அனைவரும் முதலீடு செய்யும் சிறந்த தலமாக இருப்பது ஆபரண தங்கம் தான். கொரோனா காலத்திற்கு பிறகு ஆபரணத் தங்கத்தின் விலை ஆனது அதிக அளவில் உயர்ந்து விட்டது. ஆனால் மற்றும் முதலீடுகளை காட்டிலும் தங்கத்தின் மீதான முதலீடு மிகவும் பாதுகாப்பானதாக இருப்பதால் தங்கத்தின் தேவையும் அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் ஜனவரி 18 ஆம் தேதி விடுமுறை – முக்கிய அறிவிப்பு வெளியீடு!!

இதனால் ஆபரண தங்கத்தின் விலை ஆனது கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு உயர்ந்து வருகிறது. ஆபரண தங்கத்தின் விலை ஆனது நேற்று ஒரு கிராம் ரூ.5,297 ஆக இருந்த நிலையில் இன்று ஒரு கிராமிற்கு 46 ரூபாய்கள் உயர்ந்து ரூ.5,317 ஆக  விற்பனை செய்யப்படுகிறது. மேலும் ஒரு சவரன் தங்கமானது  ரூபாய் 168 உயர்ந்து ரூபாய் 42,536 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதேபோல் வெள்ளியின் விலை ஆனது ஒரு கிராமிற்கு ரூ.1.80 அதிகரித்து ரூபாய் 75.80 ஆக விற்பனை செய்யப்படுகிறது. இதனால் ஒரு கிலோ வெள்ளி ரூ.75,800  ஆக உள்ளது. தொடர்ந்து தங்கம் மற்றும் வெள்ளியின் விலை உயர்ந்து வருவதால் பொதுமக்கள் கவலையில் உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!