ஜல்லிக்கட்டை பார்வையிட நீதிபதிகளுக்கு அழைப்பு – தமிழக அரசு வேண்டுகோள்!!
தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த அனுமதித்து அவசர சட்டம் ஒன்று பிறப்பிக்கப்பட்டது. இந்த நிலையில் இந்த அவசர சட்டத்திற்கு எதிராக வழக்கு ஒன்று உச்சநீதிமன்றத்தில் தொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு தமிழக அரசு தரப்பில் அளித்துள்ள விளக்கம் பற்றி விரிவாக பார்ப்போம்.
ஜல்லிக்கட்டு
தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த அனுமதி அளித்து அவசர சட்டம் ஒன்று பிறப்பிக்கப்பட்டது. இந்த அவசர சட்டத்திற்கு குடியரசுத் தலைவரும் ஒப்புதல் அளித்துள்ளார். இந்த நிலையில் இந்த அவசர சட்டத்தை தடை செய்ய கோரி உச்ச நீதிமன்றத்தில் பீட்டா மற்றும் விலங்குகள் நல வாரிய அமைப்பு மனு ஒன்று தாக்கல் செய்துள்ளது. இதனை தொடர்ந்து, ஜல்லிக்கட்டு போட்டி தொடர்பாக எழுத்துப்பூர்வமான ஆவணத்தை கடந்த 23ம் தேதி அன்று உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தாக்கல் செய்துள்ளது. இதில், தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிக்கு பின்னால் காளைகளின் இனவிருத்தி, கலாச்சாரம், பாரம்பரியம் உள்ளதாகவும், இத்தகைய பாரம்பரியமிக்க விளையாட்டுக்கு தடை விதித்தால் தமிழ் கலாச்சாரம் அழியக்கூடும் எனவும் தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
44,611 இந்தியர்களின் Twitter கணக்குகளுக்கு தடை – நிறுவனத்தின் அதிரடி நடவடிக்கை!
Exams Daily Mobile App Download
இதையடுத்து நீதிபதிகள், ஜல்லிக்கட்டு காளையை அவிழ்த்து விடும் போது காளை மீது பலர் பாய்கின்றனர் என கேள்வி எழுப்பினர். இதற்கு காளை மீது பலர் பாய்ந்தாலும் இதில் ஒருவர் மட்டுமே திமிலை பிடிக்க அனுமதிக்கப்படுவார் என்று அரசு விளக்கம் அளித்தது. மேலும் இந்த விதிமுறையானது கடுமையாக பின்பற்றப்பட்டு வருவதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் ஒரு முறை தமிழகத்திற்கு வந்து மாநில மக்களின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டை பார்வையிட வேண்டுமாறு நீதிபதிகளிடம் தமிழக அரசு வேண்டுகோள் வைத்துள்ளது.