2023: சென்னையில் முதன் முறையாக ஜல்லிக்கட்டு போட்டி – அமைச்சர் வெளியிட்ட சூப்பர் தகவல்!
தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டியை இந்த வருடம் சென்னையில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த போட்டியில் 500-க்கும் மேற்பட்ட காளைகள் களத்தில் இறங்க உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டது.
ஜல்லிக்கட்டு:
தமிழகத்தில் ஆண்டுதோறும் ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகையின் போது ஜல்லிக்கட்டு போட்டி வெகு சிறப்பாக நடத்தப்படும். குறிப்பாக மதுரை மாவட்டம் அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெறும் ஜல்லிக்கட்டு உலகப்புகழ் பெற்றது. இந்த ஜல்லிக்கட்டு போட்டிக்கு தடை விதிக்க கோரி கடந்த 2017 ஆம் ஆண்டு பீட்டா உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
கோல்டன் குளோப் விருதுகள் 2023 அறிவிப்பு – வெற்றி பெற்றவர்களின் முழு லிஸ்ட் உள்ளே!
இந்த தடையை உடைத்து ஒரு வழியாக மீண்டும் ஜல்லிக்கட்டு நடத்த மத்திய அரசு அனுமதி வழங்கியது. தற்போது வழக்கம் போல ஜல்லிக்கட்டு போட்டி ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நடப்பு ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டியை சென்னையிலும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. சென்னையில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற இருப்பது இதுவே முதல் முறையாகும்.
இப்போட்டியானது 2023 மார்ச் மாதம் 5ம் தேதி சென்னை படப்பையில் நடத்தப்படும். இந்த போட்டியில் 501 களைகளுடன் மாடுபிடி வீரர்கள் களத்தில் இறங்க உள்ளதாக அமைச்சர் அன்பரசன் தகவல் தெரிவித்துள்ளார் இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் முதலிடம் பெறும் காளை உரிமையாளர்களுக்கு கார் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கு பைக் போன்றவை பரிசுகளாக வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.