CSK அணியில் இன்னும் 10 வருடங்கள் விளையாடுவேன் – ரவீந்திர ஜடேஜா ட்வீட்! ரசிகர்கள் உற்சாகம்!

0
CSK அணியில் இன்னும் 10 வருடங்கள் விளையாடுவேன் - ரவீந்திர ஜடேஜா ட்வீட்! ரசிகர்கள் உற்சாகம்!
CSK அணியில் இன்னும் 10 வருடங்கள் விளையாடுவேன் - ரவீந்திர ஜடேஜா ட்வீட்! ரசிகர்கள் உற்சாகம்!
CSK அணியில் இன்னும் 10 வருடங்கள் விளையாடுவேன் – ரவீந்திர ஜடேஜா ட்வீட்! ரசிகர்கள் உற்சாகம்!

கடந்த ஆண்டு IPL சாம்பியன் பட்டம் வென்ற CSK அணியின் சிறந்த ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா பிப்ரவரி 4 தேதி நேற்றோடு சென்னை அணிக்கு விளையாட தொடங்கி 10 ஆண்டுகள் ஆகின. இதனை தனது ட்விட்டர் கணக்கில் CSK அணி மகிழ்ச்சியாக தெரிவித்துள்ளது. இதற்கு பதிலளித்த ரவீந்திர ஜடேஜாவின் ட்வீட் வைரலாகி வருகிறது.

ரசிகர்கள் உற்சாகம்:

2008ஆம் ஆண்டில் நடைபெற்ற ஐபிஎல் முதல் சீசனில், ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடினார். அந்த வருடம் ராஜஸ்தான் அணிதான் கோப்பை வென்றது. இதையடுத்து 2011ஆம் ஆண்டில் கொச்சி டஸ்கர்ஸ் கேரளா அணி இவரை ஏலம் எடுத்தது. இதனைத் தொடர்ந்து 2012 ஆம் ஆண்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இவரை 20 லட்ச ரூபாய்க்கு வாங்கியது. அன்றுமுதல் சிஎஸ்கே அணிக்காக மட்டுமே விளையாடி வருகிறார். ஜடேஜா பிப்ரவரி 4 தேதி நேற்றோடு சென்னை அணிக்கு விளையாட தொடங்கி 10 ஆண்டுகள் ஆகின. இதனை தனது ட்விட்டர் கணக்கில் CSK அணி மகிழ்ச்சியாக தெரிவித்துள்ளது.

தமிழக மின்வாரியத்தில் வேலைவாய்ப்பு – 2,400 காலிப்பணியிடங்கள்! தேர்வர்கள் கவனத்திற்கு!

2012 ஆம் ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இணைந்த ஜடேஜா 88 இன்னிங்ஸ்களில் 1324 ரன்கள் குவித்து 100 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். கடந்த ஆண்டு துபாயில் நடைபெற்ற IPL தொடரில் ஜடேஜா தனது முழு திறமையை வெளிப்படுத்தி சிறப்பாக விளையாடினார். கடந்த ஆண்டு தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி IPL கோப்பையை வென்றது. இத்தொடரில் ஜடேஜாவின் பங்களிப்பு முக்கியமானதாக கருதப்பட்டுள்ளது. பெங்களூருக்கு எதிரான போட்டியில் கடைசி ஓவரில் ஹர்ஷல் பட்டேல் பந்தில் ஜடேஜா அடித்த 37 ரன்கள் அந்த சீசனில் சிறந்த பினிஷிங் என்று பாராட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.

TN TRB காலிப்பணியிடங்கள் – தேர்வு எழுதியவர்களுக்கான முக்கிய வெளியீடு..!

சிஎஸ்கேவுக்காக 88 இன்னிங்ஸ்களில் 100 விக்கெட்களையும், 1324 ரன்களையும் சேர்த்துள்ளார். இப்படி மிகச்சிறந்த ஆல்-ரவுண்டராக வலம் வரும் இவரை இந்த ஆண்டு சிஎஸ்கே முதல் வீரராக தக்கவைத்துள்ளது. நேற்றோடு ஜடேஜா சென்னை அணிக்காக விளையாடி சரியாக 10 வருடங்கள் ஆகிவிட்டது. இதனைக் கொண்டாடும் வகையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம், தனது ட்விட்டர் பக்கத்தில், “ஜடேஜா சிஎஸ்கேவுக்கு வந்து 10 வருடங்கள் ஆகிவிட்டது” எனத் தெரிவித்து. இதற்கு கமெண்ட் செய்துள்ள ஜடேஜா, “இன்னும் 10 வருடங்கள் வரை இந்த அணிக்காக விளையாட விரும்புகிறேன்” எனத் தெரிவித்துள்ளார். இதனால் CSK ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!