தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி, பழைய ஓய்வூதிய திட்டம் – ஜாக்டோ ஜியோ மனு!

2
தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி, பழைய ஓய்வூதிய திட்டம் - ஜாக்டோ ஜியோ மனு!
தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி, பழைய ஓய்வூதிய திட்டம் - ஜாக்டோ ஜியோ மனு!
தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி, பழைய ஓய்வூதிய திட்டம் – ஜாக்டோ ஜியோ மனு!

தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோ முதல்வர் முக ஸ்டாலின் அவர்களுக்கு 14 கோரிக்கைகளை உள்ளடக்கிய மனுவை அளித்துள்ளனர்.

கோரிக்கை மனு:

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களை சென்னை தலைமை செயலகத்தில் சந்தித்து அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் கூட்டமைப்பு ஜாக்டோ ஜியோ சார்பில் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் கோரிக்கை மனுவை அளித்தனர். இந்த மனுவில் 14 கோரிக்கைகள் உள்ளடங்கி இருந்தது குறிப்பிடத்தக்கது. அந்த மனுவில் குறிப்பிடப்பட்டவைகள் பின்வருமாறு, கடந்த 2003-ஆம் ஆண்டுக்குப் பிறகு அரசுப் பணியில் சோ்ந்தோருக்கு தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுவரும் பங்களிப்புடன் கூடிய ஓய்வூதிய திட்டத்தினை கைவிட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தினையே அமல்படுத்திட வேண்டும்.

தமிழகத்தின் கலை & அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை – ஆகஸ்ட் 23 முதல் துவக்கம்!

இழந்த உரிமைகளை மீட்டெடுப்பதற்காக கடந்த செப்டம்பர் 2017, ஜனவரி 2019 ஆகிய காலங்களில் ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பு நடத்திய வேலை நிறுத்த போராட்ட காலங்களை பணிக்காலமாக வரன்முறைப்படுத்த வேண்டும். கடந்த ஜாக்டோ- ஜியோ போராட்ட காலத்தில், ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், பணியாளர்கள் மீது காவல்துறையால் புனையப்பட்ட பொய் வழக்குகளை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். கொரோனா நோய் தொற்று காலத்தில் கடந்த அதிமுக அரசு மூன்று தவணை அகவிலைப்படியை முடக்கியது. தற்போது மத்திய அரசு அதன் ஊழியர்களுக்கு ஜூலை 2021 முதல் 11 சதவீதம் அகவிலைப்படியை அறிவித்துள்ளது. மத்திய அரசு வழங்கியுள்ள அகவிலைப் படியை தமிழக அரசு உடனடியாக ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு வழங்க வேண்டும்.

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் காலையிலேயே கனமழை – பொதுமக்கள் மகிழ்ச்சி!

முதுநிலை ஆசிரியர்கள், அரசு பணியாளர்கள், கண்காணிப்பாளா்கள், தலைமை செயலகம் உள்ளிட்ட அரசு அலுவலர்கள், களப் பணியாளர்கள், பல்வேறு துறைகளில் உள்ள தொழில்நுட்ப ஊழியர்கள், ஊர்தி ஓட்டுநர்கள் ஆகியோருக்கான ஊதிய முரண்பாட்டை களைய வேண்டும். 3,500 அரசு தொடக்கப் பள்ளிகளை உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுடன் இணைக்கும் முடிவினையும் 3,500 சத்துணவு மையங்களை மூடுவதையும் முற்றிலுமாக கைவிட வேண்டும் போன்ற கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு உள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

2 COMMENTS

  1. நான் கடந்த 2017ம் ஆண்டு புதிய ஸ்மார்ட் அட்டைக்காக விண்ணப்பத்தை கணிணி மூலமாக விண்ணப்பித்திருந்தேன். ஆனால் இதுவரை நான் எந்த அட்டையும் பெறவில்லை. அதற்குமாறாக ஒரு திடுக்கிடும் தகவல் என் கைபேசியிலும் குறுஞ்செய்தியாகவும் வந்தது. அதனில் இந்த விண்ணப்பதாரர் குறிப்பிட்ட விலாசத்தில் வசிக்கவில்லை என்று. நான் பலமுறை முதல்வரின் தனி அலுவலகத்திற்கு முறையிட்டும் எவ்வித பலனும் இதுவரை கிட்டவில்லை. ஆண்டவனிடத்தில்தான் முறையிடவேண்டும்.

  2. Ayya nan 2020 july tnstc el 33 andukal panipurinthu oiupetru ethunalvarai 16 mathankalakium antha oru panapalanum ethuvarai kidaikkavillai nan ethuvarai 4 murai muthalamacharin uthavi maiyathirkku kadithameluthium orupalanumillai eni etharkkumel ethai yaridam muthalippathu anathu kudumpam annai athirparthu salithuvittathu nan mikuntha mana ulachalil ullen makkalthan anakku mudiukkattavendum ethupola tamilnattil anthaoru arasu thuraum kidayathu ankall pokkuvarathu thuraien uliyarkalaimattum an arasu matranthottathu malarai ninikkinrathu?

    In S. GURUMOORTHY TNSTC PVI 614804 pin)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!