TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு – ஊதிய உயர்வு குறித்த விளக்கம்!

0
TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு - ஊதிய உயர்வு குறித்த விளக்கம்!
TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு - ஊதிய உயர்வு குறித்த விளக்கம்!
TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு – ஊதிய உயர்வு குறித்த விளக்கம்!

இந்தியாவில் பணி புரியும் ஐடி ஊழியர்களுக்கு சம்பள உயர்வு கிடைக்காது. இந்த வருடத்தில் ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்படுவார்கள் என்று சமூக வலைத்தளங்களில் தகவல் பரவி வருகிறது. இதனை அறிந்த ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்த நிலையில் TCS நிறுவனம் சம்பள உயர்வு குறித்து விளக்கம் அளித்துள்ளது.

சம்பள உயர்வு:

இந்தியாவில் கடந்த 2 ஆண்டுகளில் ஐடி துறை அதிக வளர்ச்சி அடைந்துள்ளது. அதனால் நிறுவனங்களில் ஊழியர்களின் தேவையும் அதிகரித்துள்ளது. இதனையடுத்து முன்னணி ஐடி நிறுவனங்கள் புதிய ஆட்களை பணியமர்த்துவதில் ஆர்வம் காண்பித்து வந்தனர். அந்த வகையில் கல்லூரி முடித்த பிர்ஸ்ஷர்களுக்கு பயிற்சியுடன் கூடிய வேலை வாய்ப்புகளை வழங்கியது. மேலும் ஊழியர்களை தக்க வைத்துக் கொள்ளும் நோக்கில் சம்பள உயர்வு, ஒர்க் ப்ரம் ஹோம் உள்ளிட்ட சலுகைகளையும் வாரி வழங்கியது. இதனால் முன்னணி ஐடி நிறுவனங்களான டிசிஎஸ், விப்ரோ, ஹெச்சிஎல் டெக்கில் ஊழியர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இந்த நேரத்தில் வரும் ஆண்டில் ஐடி ஊழியர்களுக்கு சம்பள உயர்வு கிடைக்காது. மேலும் ஊழியர்களுக்கு வழங்கப்படும் சலுகைகைகளும் குறைக்கப்படும் என்று தகவல் வெளியானது. இதனால் ஐடி ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து முன்னணி ஐடி நிறுவனமான TCS விளக்கம் அளித்துள்ளது. அதாவது ஊழியர்களுக்கான சம்பள உயர்வு கொள்கையில் எந்த மாற்றமும் இல்லை என்றும் அனுபவம் பெற்ற ஊழியர்களுக்கும் ஆண்டு சம்பள அப்ரைசல் அளிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

ஆன்லைன் மூலமாக வாக்காளர் அட்டையை ஆதாருடன் இணைப்பு – இதோ உங்களுக்கான வழிமுறைகள்!

இது குறித்து TCS வெளியிட்ட செய்திக் குறிப்பில் பொருளாதார மந்த நிலை ஏற்படும் என்ற அச்சத்தால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவை சேர்ந்த ஐடி நிறுவனங்கள் செலவுகளை குறைத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக ஊதிய உயர்வு கிடைக்காது என்று கூறப்படுகிறது. ஆனால் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏதும் வெளியாகவில்லை. மேலும் TCS கொரோனா பாதிப்பு காலத்திலும் சம்பள உயர்வு பாதிக்கப்படவில்லை. அதனால் இப்போதும் சம்பள உயர்வில் பாதிப்பு இருக்காது என்று தெரிவித்துள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!