PM கிசான் திட்ட பயனாளிகளுக்கு ஜாக்பாட் அறிவிப்பு – 12 வது தவணை தொகை விரைவில்!

0
PM கிசான் திட்ட பயனாளிகளுக்கு ஜாக்பாட் அறிவிப்பு - 12 வது தவணை தொகை விரைவில்!
PM கிசான் திட்ட பயனாளிகளுக்கு ஜாக்பாட் அறிவிப்பு - 12 வது தவணை தொகை விரைவில்!
PM கிசான் திட்ட பயனாளிகளுக்கு ஜாக்பாட் அறிவிப்பு – 12 வது தவணை தொகை விரைவில்!

நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வரும் பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டத்தின் 12 வது தவணை தொகையை விரைவில் வழங்க இருப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்கான முழு விவரங்களையும் பற்றி இந்த பதிவில் காணலாம்.

PM கிசான் திட்டம்:

நாட்டில் விவசாயத்தையும், விவசாயிகளின் வாழ்வை முன்னேற்றுவதற்கும் மத்திய அரசு பல திட்டங்கள் மற்றும் சலுகைகளையும் வழங்கி வருகிறது. 2018ம் ஆண்டு பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டம் விவசாயிகளுக்கு நிதி உதவி வழங்குவதற்காக தொடங்கப்பட்டது. சுமார் 11 கோடி விவசாயிகள் இந்த திட்டத்தின் மூலம் பயனடைந்து வருகின்றனர். நாட்டில் நலிந்த விவசாயிகளுக்கு பிரதமரின் கிசான் சம்மான் நிதி திட்டத்தின் மூலம் ஆண்டு தோறும் 3 தவணையாக ரூ.6,000 நிதி உதவி வழங்கப்படும். மத்திய அரசு விவசாயிகளின் நேரடி வங்கி கணக்கில் இந்த தொகையை வழங்கும்.

இதுவரை 11 தவணை நிதியானது வழங்கப்பட்டு உள்ளது. 12-வது தவணை நிதியை விவசாயிகளுக்கு வழங்குவதற்கான தேதியை மத்திய அரசு விரைவில் வெளியிட உள்ளது. 11 வது தவணையானது கடந்த மே 30, 2022 அன்று கிட்டத்தட்ட 10 கோடி விவசாயிகளுக்கான தொகை வழங்கப்பட்டது. விவசாயிகள் 12வது கட்டணத்திற்காகக் காத்திருக்கும் போது, பட்டியலில் உள்ள பயனாளிகளின் பெயரை உறுதி செய்ய வேண்டும். பிரதம மந்திரி கிசான் திட்டத்திற்கு, இந்திய குடிமக்களான சிறு மற்றும் குறு விவசாயிகள் நிதி உதவிக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள். மேலும், விவசாய நிலங்களை தங்கள் பெயரில் வைத்திருக்கும் அனைத்து நிலம் வைத்திருக்கும் விவசாயிகளின் குடும்பங்களும் இத்திட்டத்தின் கீழ் பயன் பெற தகுதியுடையவர்கள்.

மூர்த்தியிடம் வீட்டை வாங்குவது பற்றி பேசிய ஜனார்த்தனன், சந்தோஷத்தில் மீனா – இன்றைய எபிசோட்!

பிரதம மந்திரி கிசான் திட்டத்தில் அடுத்த தவணைக்கான நிதியை பெற உள்ளவர்களின் பட்டியலை சரிபார்க்கும் முறை:

  • முதலில், https://pmkisan.gov.in, PM Kisan Yojana இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.
  • முகப்புப் பக்கத்தில், “Farmers Corner” விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
  • Farmers Corner பிரிவில் உள்ள பயனாளிகள் பட்டியல் விருப்பத்தை கிளிக் செய்யவும்.
  • கீழ்தோன்றும் பட்டியலில் இருந்து மாநிலம், மாவட்டம், துணை மாவட்டம், தொகுதி மற்றும் கிராமத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
  • ‘அறிக்கையைப் பெறு’ என்பதைக் கிளிக் செய்யவும்.
  • இப்பொழுது, பயனாளிகளின் பட்டியல் தோன்றும். அதில், உங்கள் பெயரை சரிபார்த்துக் கொள்ளலாம்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!